இடுகைகள்

சிறிது சிறிதாக செய்யுங்கள்.

படம்
 வாழ்க்கையில் சில எதிர்பாராத சம்பவங்கள் நம்மை செயல் படாமல் நிலை குலைய செய்து விடுகின்றன.  அதிலிருந்து மீண்டு வந்து மறுபடியும் வாழ்க்கையை தொடங்குவது என்பது மிகவும் சவாலான விசயம்.  சோகமான அல்லது பயங்கர இழப்பான நிகழ்வு நம்மை மிகவும் சோர்வடைய செய்து விடும். இதில் இருந்து மீண்டு மறுபடியும் வாழ்வை தொடங்குவது என்பது எளிதான காரியம் அல்ல. ஒன்றிலிருந்து (from scratch)தொடங்குங்கள். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் திறமையாக வேலை செய்பவராக இருக்கலாம். அதை எல்லாம் மறந்து விட்டு மீண்டும் முதல் நாள் எவ்வாறு தொடங்கினீர்களோ அது போல மீண்டும் தொடங்குங்கள். இது மிகவும் சாதாரணமான ஒன்றாக தோன்றலாம். ஆனால் இது மிகவும் வலிமையான ஒன்று. ஏற்பட்ட நிகழ்வுகளின் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்து மறுபடியும் தொடங்குவது எளிதான ஒன்றல்ல. நாம் எவ்வளவு சிறப்பாக இருந்தோம். எப்போ என்ன எவ்வளவு குறைவாக செயல் படுகிறோம் என்று என்ன வேண்டாம். மறுபடியும் உங்களை கட்டமைக்க அது தான் முதல் படி. வாழ்வில் இடறி விழுவது இயல்பு தான். மீண்டு எழுந்து அதை தொடங்குவது தான், ஆகச் சிறந்த ஒன்றாக இருக்க முடியும்.

தொடர்ந்து உழையுங்கள். அதுவே முன்னேற்றத்திற்கான வழி

படம்
 தொடர்ச்சியாக ஒரு வேலையை செய்வது என்பது எளிதான காரியம் அல்ல.அதற்கு நிறைய தியாக மனப்பான்மை வேண்டும். ஒரே நாளில் எல்லா வளர்ச்சிகளும் அல்லது மாற்றங்களும் நிகழ்ந்து விடாது. அது அணு அணுவாக நிகழக்கூடிய ஒன்று. தொடர் உழைப்பின் வாயிலாக மட்டுமே மகத்தான காரியங்களை செய்ய முடியும். மிக முக்கியமான ஒரு விசயம் என்னவென்றால் வளர்ச்சியை மையமாக வைத்து செயல் படும் போது அதற்கென்று சிறிதுகாலம் காத்திருக்க வேண்டும். அலை ஒரே முறை மட்டும் வந்து மோதி பாறையின் கரைப்பது இல்லை. தொடர்ந்து அடிக்க கூடிய அலை பறையை கரைக்கிறது. எனவே தொடர் உழைப்பின் மீது கவனம் செலுத்துங்கள். வளர்ச்சி தானாகவே இருக்கும். வெற்றியை துரத்தாதீர்கள். வளர்ச்சிக்கான பாதையை மட்டும் கண்டறியுங்கள். அதில் நீங்கள் எதையும் பொருட்படுத்தாது முன்னேறி கொண்டே இருங்கள். உங்கள் இலக்கை அடைவீர்கள்.

சலிப்புணர்வுடன் இருங்கள்.

படம்
 சலிப்புணர்வு (Boredom)  இன்றைய உலகத்தில் சலிப்புணர்விற்கே இடமில்லாமல் போயிற்று. ஒரு வரிசையில் நிற்கிறோம் என்றால் அதற்குள் கைபேசியில் ஏதாவது ஒன்றை பார்க்க தொடங்கி விடுகிறோம். உணவு உண்ணும் போதும் கைபேசியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். சும்மா ஒரு அரை மணி நேரம் இருக்க முடிவதில்லை. இன்றைய நவீன உலகில் கைபேசி நிறைய இடங்களை ஆக்கிரமித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். மனிதன் ஒரு விசயத்தை சிரமேற்கொண்டு செய்ய விரும்பினால் இந்த சலிப்புணர்வையோ அல்லது பொறுமையையோ அல்லது சகிப்புத்தன்மையையோ நிச்சயம் கையாள வேண்டும்.  கைபேசியை விடுத்து மற்ற பொழுது போக்கு அம்சங்களையும் விடுத்து மனிதன் மெதுவாக செயல் பட வேண்டும். ஒரு முழுமுயற்சிக்கு அல்லது நெடு நீண்ட பயணத்திற்கு இந்த சலிப்புணர்வு இன்றி அமையாது.  மற்ற மக்களுக்கு எப்படியா சாகசமான வாழ்வை தேர்ந்தெடுக்கும் பொருட்டு அல்லது அர்ப்பணிப்பு உணர்வோடு ஏதோ ஒன்றை நீங்கள் செய்ய போகிறீர்கள் என்றால் இந்த சகிப்புத்தன்மையை நீங்கள் கற்றுக் கொண்டே ஆக வேண்டும்.  இது வாழ்வினை சூறையாடுவது போல் தோன்றலாம் ஆனால் இறுதியில் உங்கள் பயணத்திற்கு நிச்சயமாக ஒரு அர்த்தத...

பிறர் கூறுவதை காட்டிலும் உங்கள் சொந்த கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.

படம்
 வாழ்க்கையில் நாம் பல முக்கியமான தருணங்களை சந்தித்து இருப்போம். அந்த தருணத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய  கட்டாயத்தில் இருந்திருப்போம்.  இந்த சமயத்தில் தான் நம்மை சுற்றியுள்ள உறவினர்கள், நண்பர்கள் என மக்கள் அனைவரும் நம்மிடம் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களைக் கூறுவார்கள்.  இது பொதுவாக எல்லோருக்கும் நடக்கும் விசயம் தான். ஆனால் இது போன்ற பலவிதமான கருத்துக்கள் நமக்கு சந்தேகங்களையும், குழப்பங்களையும், பயத்தையும் உண்டாக்கும்.  எல்லோரும் என்ன இப்படி கூறுகிறார்கள் என்ற எண்ணம் உருவாகும். சரியான முடிவை நாம் எடுக்க வேண்டும் என்ற ஒரு செயற்கையான கட்டாயமான சூழலை நாமே நமக்கு அமைத்துக் கொள்வோம்.  இவையனைத்தும் இருக்கக்கூடிய விசயங்கள் தான். இதுபோன்ற தருணங்களில் உங்களுடைய சொந்த முடிவுகளை எடுங்கள். உங்கள் இதயத்தில் இருந்து எழக் கூடிய கருத்திற்கு முன்னுரிமை அளியுங்கள்.  உங்கள் வாழ்விற்கான முடிவுகளை நீங்களே எடுங்கள். அது எவ்வளவு பெரிய தோல்வியை அடைந்தாலும் பரவாயில்லை. அல்லது அது மிகப் பெரிய வெற்றியை அடைந்தாலும் பரவாயில்லை. உங்களுடைய வாழ்க்கையை நீங்களே தீர்மானியுங...

தொடங்குங்கள் முடிந்துவிடும்

படம்
 பொதுவாக நம் எல்லோருக்கும் சில கனவுகள் இருக்கும் அல்லது புதிய முயற்சிகளை தொடங்க வேண்டும் அல்லது புதிய பழக்கங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வாழ்க்கையில் நம்மை மேம்படுத்திக் கொள்ள நாம் புதிய முயற்சிகளைத் தொடங்குவோம்.  உதாரணமாக, காலையில் உடற்பயிற்சி செய்வது, நடைபயிற்சி மேற்கொள்வது போன்ற விசயங்களில் தொடங்கி தொழில் தொடங்குவது, இணைய தளங்களில் உங்களுக்கு என்று ஒரு புதிய பக்கத்தை உருவாக்குவது போன்ற விசயங்களாகட்டும். இதற்கெல்லாம் ஒரு நேரம் வரட்டும், பார்த்துக்கொள்வோம் என்று விட்டு விடுவோம். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தொழில் தொடங்குவது, மற்றும் கனவுகளை நோக்கிய பயணத்தைத் தொடங்குவது போன்ற நல்ல விசயங்களுக்கு நல்ல நாளையும் நல்ல நேரத்தையும் எதிர்ப் பார்த்துக் காத்துக் கொண்டிருப்போம். உடற்பயிற்சி கூடத்திற்கு (GYM) செல்வதற்கு சரியான உடைகள் இல்லையே என்று எண்ணுவது. தொழில் தொடங்க போதுமான முதலீடு அல்லது இடமோ இல்லை என்று காத்திருப்பது. இவையெல்லாம் நேர விரயமாக்க கூடாது. இருக்கின்ற உடைகளை வைத்துக் கொண்டு உடற்பயிற்சிக்கு செல்லுங்கள். இருக்கின்ற முதலீட்டை வைத்துக் கொ...

தோல்விகளை தூக்கி சுமக்காதீர்கள். அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

படம்
 நாம் நம்முடைய வாழ்வில் நிறைய  முயற்சிகளை மேற்கொண்டிருப்போம், பெரும்பாலும் அதில் தோல்விகளையே சந்தித்திருப்போம். அந்த தோல்வியின் தாக்கங்கள் நம்முள் தேங்கியிருக்கும்.  இப்பொழுது தானே ஒரு முயற்சியினை மேற்கொண்டோம், பிறகு இன்னொருநேரம் இன்னொரு முயற்சியினை மேற்கொள்வோம் என ஏற்பட்ட தோல்வியின் தாக்கம் அடுத்த முயற்சியினை எடுக்க நம்மை தாமதப் படுத்தும். ஏற்பட்ட தோல்வியில் இருந்து எதனால் தோல்வி அடைந்தோம் என்று கண்டறிந்து முன்னேறி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏற்பட்ட தோல்வியையும்,  அவமானத்தையும் மறந்து இன்று ஒரு புதிய நாள் இன்று ஒரு புதிய வாய்ப்பு உள்ளது அதற்காக உழைக்க நாம் கற்றுக் கொள்ளவேண்டும். நாம் எவ்வளவு இழந்தாலும் திரும்ப முயற்சிக்க இன்னொரு வாய்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். நாமாக நிறுத்தும் வரை நாம் தான் நம்முடைய எல்லை.....

சோகமாக இருக்காதீர்கள் . அது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு

படம்
 சோகமாக இருக்காதீர்கள் . அது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு  நம் வாழ்க்கையில் நாம் எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்கின்றன. சில சம்பவங்கள் நன்மை பயக்கின்றன. சில விசயங்கள் நமக்கு மோசமான உணர்வு நிலையையும், மிகுந்த துக்கத்தையும் தோற்றுவிக்கின்றன.  இதுவே வாழ்க்கையின் போக்கு. பல நேரங்களில் துன்பத்தை கடக்கின்ற மனப் பக்குவம் நேரம் கடந்தே வருகின்றன. மகிழ்ச்சியான விசயங்கள் கொடுக்கக் கூடிய விசயங்களை துன்பமான விசயங்களால் கொடுக்க முடியாது. துன்பங்கள் கொடுக்கக் கூடிய விசயங்களை இன்பமான நேரத்தால் கொடுக்க முடியாது. என்ன நடந்தாலும் சரி மீட்பு கண்டிப்பாக நடைபெறும். எனவே மன மகிழ்வோடு இருங்கள். எதை குறித்தும் அதிக பய உணர்வோடு இருக்க வேண்டாம். எதை குறித்தும் குற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். வாழ்வு மிகப் பெரியது. வாழ்வு அனைத்தையும் மாற்றக் கூடியது. எனவே அன்பர்களே சோகமாக இருக்காதீர்கள். களிப்போடு வாழ்க்கையை  கழியுங்கள்.

உழைப்பிற்கான பலன் தள்ளிப் போகுமே தவிர கிடைக்காமல் போகாது.

படம்
 உழைப்பிற்கான பலன் தள்ளிப் போகுமே தவிர கிடைக்காமல் போகாது.  நாம், நம் வாழ்வில் நம்மை மேம்படுத்திக் கொள்வதற்காக பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். கொஞ்சம் நாள்கள் அதனை சரியாக கடைபித்துக் கொண்டும் தொடர்ந்து அந்த முயற்சிகளை செய்து கொண்டு வருகிறோம்.  நாள்கள் செல்ல , செல்ல நாம் செய்து வந்த விசயங்களையும், முயற்சிகளையும் கைவிட்டு விடுவோம். மனதின் வலி தாங்கும் மனப்பான்மையானது. தொடர்ந்து ஒரு செயலை செய்ய செய்ய தான் அதிகமாகிறது. எனவே உங்களுடைய முயற்சிகளை நீங்கள் எப்போது நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ? அப்போது கொஞ்சம் உங்களை வலுப்படுத்தி அந்த முயற்சியினை விடாமல் தொடருங்கள். தோல்வி என்பது வெளி புறத்தில் இருந்து ஏற்படுவது அல்ல. அது உள்ளிருந்து தான் ஆரம்பமாகிறது. எனவே உள்ளத்தினை கொஞ்சம் கடினமாக வைத்திருங்கள். அதுவே கடினமான முடிவுகளை எடுக்க உதவும். ஒரு மரமானது ஒரே வெட்டில் விழுவதில்லை. ஒவ்வொரு வெட்டுமே அந்த மரத்தினை வெட்டி வீழ்த்துவதற்கு துணை புரிகிறது.

எதை செய்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள்.

படம்
 எதை செய்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள். நீங்கள் வாழ்வில் எதை அதிகமாக செய்கிறீர்களோ அதனை பொறுத்தே உங்களுக்கு நடக்கக் கூடிய விசயங்களாகட்டும், உங்கள் வாழ்க்கை ஆகட்டும்.  ஆகவே எந்த ஒரு விஷயம் குறித்தும் அலட்சியமாக இருக்காதீர்கள். சும்மா ஒரு முறை முயற்சி செய்து பார்க்க போகிறோம் என்பது போலவே தோன்றும். உதாரணமாக கொஞ்ச நேரம் போன் பார்த்து விட்டு வைத்து விடலாம் என்று தோன்றும் ஆனால் அது குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்தை எடுத்துக் கொள்ளும்.  எனவே அன்றாட வாழ்க்கையில் நாம் என்ன செய்கிறோம் என்பதில் கூடுதல் கவனத்துடன் இருப்பது சிறப்பான ஒன்றாக அமையும்.

நீங்கள் மேம்பட விரும்பினால் வாழ்க்கை உங்களை முதலில் சுக்கு நூறாக உடைக்கும்

படம்
 நீங்கள் மேம்பட விரும்பினால் முதலில் வாழ்க்கை உங்களை சுக்கு நூறாக உடைக்கும். பல நேரங்களில் நாம் பலவிதமான பிரச்சினைகளில் இருந்தோ தோல்விகளில் இருந்தோ நாம் வெளி வந்திருப்போம். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையில் இந்தப் பிரச்சினைகள் ஓயாவே ஓயாது. உதாரணமாக 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எடுத்துக் கொள்வோம். நமது ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் என எல்லோரும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நமக்கு சொல்லி இருப்பார்கள். "இந்த 10ஆம் வகுப்புத் தேர்வை மட்டும் நல்ல படியாக எழுதி முடித்து விடுப்பா அப்பறம் நல்ல ஊர் சுற்றலாம் என்று". அப்பறம் 12ஆம் வகுப்பு, கல்லூரி என்று நீண்டுக் கொண்டே போய் கொண்டிருக்கும். ஆனால் அடுத்தடுத்து பிரச்னைகள் வந்து கொண்டே தான் இருக்கும். அது தீரவே தீராது. நாம் வாழ்க்கையில் முன்னேறி செல்ல செல்ல புதிய அறிவு தேவைபடும். அதனால் தான் அந்த அறிவிற்காகவும், அனுபவத்திற்காகவும் வாழ்க்கை நமக்கு பிரச்சினைகளை வழங்குகிறது.  நாம் கொஞ்சம் சிரத்தையுடன் அந்த பிரச்சினைகளை கையாள வேண்டும். வெற்றியோ,தோல்வியோ அதை துணிவுடன் எதிர் கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தின் நியதியே அது தான்.

தொடர்பயிற்சி அனைத்தையும் வெல்லும். விடாது தொடர்ந்து அடிக்கும் அலையே பெரும்பாறையை கரைக்கும்.

படம்
 பயிற்சி, பயிற்சி , பயிற்சி  நாம் நமது வாழ்க்கையில் நமக்கென்று சில கனவுகளையும், இலக்குகளையும் வைத்துக் கொள்கிறோம். நம்முடைய கனவுகளுக்காக எந்த அளவு உழைக்க வேண்டும் என்பதனை நாம் அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. பல நேரங்களில் நாம் தொடர்ந்து உழைப்பதனை தவறவிடுகிறோம். முதலில் நம் மனதினை நாம் பழக்க வேண்டும். நம்முடைய மனதினை பண்படுத்த வேண்டும் , ஏனென்றால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று மனம் அவ்வப்போது நம்முடைய கனத்தை திசை திருப்பி விடுகிறது. எனவே நம்முடைய மனதினை தொடர்ந்து பயிற்று வித்து பண்படுத்த வேண்டும். கடலில் ஏற்படும் அலையானது எவ்வாறு தொடர்ந்து வந்து கரையில் இருக்கும் பாறையின் மோதி பாறையைக் கரைப்பது போன்று தொடர்ந்து நாம் நம்முடைய மனதினை பயிற்று வித்து பண்படுத்த வேண்டும். உறுதியான மனதில் இருந்தே உறுதியான எண்ணங்களும் உறுதியான முடிவுகளும் பிறக்கும். எல்லாவற்றிற்கும் முதன்மையானது மனம் தான்  தொடர் பயிற்சியின் மூலமே இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இதனால் ஒழிய தொடர்ந்து போராடவும், சகிப்பு தன்மையுடன் இருக்கவும் முடியும்.

குணநலன்: வெற்றிக்கு இணையான விசயங்களை நமக்கு அளிக்கக்கூடிய பண்பு

படம்
 குணநலன்: வாழ்க்கையில் பெரிதாக வெற்றி அடைந்தால் மட்டுமே அனைவரும் நம்மை மதிப்பர் என்ற கருத்து நம் வாழ்க்கையில் மேலோங்கி உள்ளது. ஆனால் உண்மையில் அவை எல்லாம் பலன் அளிக்கக்கூடிய ஒன்றா? வாழ்க்கையின் இறுதியில் அவற்றால் நிம்மதி ஏற்படுமா? என்று ஆராய்ந்தால் எல்லை என்ற பதிலே கிடைக்கும்.  அதற்காக எதையுமே முயற்சிக்காமல் ஒரு சோம்பேறித்தனமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று குறிப்பிடவில்லை. பெரும்பாலும் வெற்றியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிற நம்முடைய பயணத்தில் உண்மைத் தன்மையின் அளவு குறைந்துக் கொண்டே வருகிறது. அப்பொழுது வெற்றி எப்படி இருக்க வேண்டுமெனில், யாருடைய மனதையும் புண்படுத்தாமல் , நேர்மையான முறையில் ஒரு வெற்றி அமையுமெனில் அதுவே சிறந்ததாக இருக்க முடியும். கருணை , இரக்கம், அன்பு, பரிவு இதனை விட மிகுந்த மனிதனை அழகாகக் கூடிய விசயங்கள் இவ்வுலகில் இல்லை. உங்கள் துறையை ஆழமாக காதலியுங்கள். இந்த வெற்றித் தோல்விக்கு அப்பாற்பட்டு உழையுங்கள். வெற்றி செயற்கையானது. அன்பு இயற்கையிலே உள்ளது.

தோல்விகளை குறித்து கவலைப்பட வேண்டாம் - ஹர்ஷா போக்லே

படம்
 தோல்விகளை குறித்துக் கவலை கொள்ள வேண்டாம் - ஹர்ஷா போக்லே கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் சிறந்த வர்ணனையாளர்களில் ஒருவர் ஹர்ஷா போக்லே. தற்போது அவர் பேசியுள்ள வீடியோ ஒன்று வலை தளங்களில் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறீர்களா? அதை குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கூறுகிறார். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் ராகுல் டிராவிட் 604 இன்னிங்ஸ் இந்திய அணிக்காக பேட்டிங் செய்து இருக்கிறார். அதில் 410 இன்னிங்ஸ் 50 ரன்களுக்கும்  குறைவாக ஆடியுள்ளார். மீதமுள்ள ஆட்டங்களில் மட்டுமே அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.  ரோஜர் பெடரர், மைக்கேல் ஜோர்டன் போன்ற சிறந்த வீரர்கள் தங்கள் ஆடிய ஆட்டங்களில் பல முறை தோல்வியையே தழுவி உள்ளனர். அவர்கள் வெற்றிப் பெற்றதை விட அவர்கள் அடைந்த தோல்விகளே அதிகம் தொடர்ந்து போராடி அவர்கள் சில கோப்பைகளையும் பட்டங்களையும் வென்றிருக்கிறார்கள்  எனவே ரிசல்ட்களை குறித்து கவலைக் கொள்ளாமல் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருங்கள் அது எந்த துறையாக இருக்கட்டும். உங்கள் துறையோடு இணைந்து வாழ்ந்து வாருங்கள். பிறகு எல்ல...

சிந்தனைகள், எண்ணங்கள்:- வாழ்க்கையில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றி பார்ப்போம்

படம்
 எண்ணங்கள்  சிந்தனைகள் : தொடர்ந்து நாம் சிந்திக்க கூடிய சிந்தனைகளும் எண்ணங்களும் தான் நம் வாழ்க்கையினை கட்டமைக்கின்றன. நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் அடித்தளமாக அமைவதும் இதுவே. பரிணாம வளர்ச்சியின் படி ஒரு கதை ஒன்றைப் பார்ப்போம்.  ஒட்டக சிவிங்கிகளைப் பற்றியது இது. பண்டைய காலத்தில் ஒட்டக சிவிங்கிகளின் கழுத்து மிகப் பெரியது ஒன்றும் கிடையாது. குதிரைகளை போலவே அவற்றிற்கும் கழுத்துப் பகுதி சாதாரணமாகவே இருந்தது. இந்த ஒட்டக சிவிங்கிகள் புற்களையும், இலை தழைகளையும், உண்டு வாழ்ந்து வந்தன. நாளடைவில் தரையில் இருக்கும் புற்களின் அளவுக் குறைந்து போக, மரங்களின் கிளைகளில் உள்ள இலைகளை சாப்பிட்டு வந்தன. நாட்கள் செல்ல செல்ல மரங்களில் உயரமான கிளைகளில் மட்டுமே இலைகள் இருந்தன. இதனால் இலைகளை எட்டி பிடித்து உண்ணுவதற்கு அவைகளுக்கு சிரமமாக இருந்தது.தொடர்ந்து எட்டி எட்டி பிடித்து உண்டுக் கொண்டு இருந்தன.  தொடர்ந்து எட்டி எட்டி சாப்பிட்ட வண்ணம் இருந்தாலும் , வேறு வழியில்லை கழுத்தை உயர்த்தி தழைகளை சாப்பிட்டாக வேண்டிய எண்ண உந்துதலும் காலப் போக்கில் இந்த மிகப் பெரிய கழுத்து உருவாவதற்கு காரணமாகி விட்டன....

ஆழ்ந்து கவனிக்கும் கலை பகுதி -2

படம்
 நாம் முந்தைய பதிவில் பார்த்ததை சற்று நினைவு கூறுவோம்.  எண்ணங்கள் மனதை ஆக்கிரமிப்பு செய்து இருந்தால் நம்மால் கவனிக்க இயலாது.  நம் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு சம்பவம் நமக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். நம் மனம் அதையே நினைத்துக் கொண்டு அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கும் பொழுது நம்முடைய சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் அதன் மீதே இருக்கும். மனம் வெறுமையாக இருக்கும் போதோ அல்லது அமைதியாக இருக்கும் பொழுது மட்டுமே நம்மால் கவனிக்க இயலும். இது என் வாழ்வின் சொந்த அனுபவம். நான் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் எனக்கு என் சக தோழியின் மீது ஈர்ப்பு இருந்தது. நான் அவளிடம் எப்போதும் பேசிக் கொண்டு ஊர் சுற்றிக் கொண்டு இருப்பேன். தேர்வு நேரங்களில் புத்தகங்களை திறந்து வைத்துக் கொண்டு அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டே இருப்பேன். என்னால் படிக்க இயலாது. தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைந்து தமிழ், ஆங்கிலம், தவிர மற்ற அனைத்துப் பாடங்களிலும் தோல்வி தான். அவளைப் பற்றி நினைப்பது சுகமாக இருக்கும். ஆனந்தமாக இருக்கும். அவளைப் பற்றி நினைக்கையில் சிரிப்பு வரும். 24...

ஆழ்ந்து கவனிக்கும் கலை

படம்
கவனித்தல்:- கவனித்தல் என்பது ஒரு தனிச் சிறப்புடையது. நாம் எல்லோருமே பள்ளி கல்லூரிக்குச் சென்று இருப்போம். வகுப்புகளில் அமர்ந்து பாடங்களை கேட்டு இருப்போம். அவ்வாறு கேட்கையில் நம் கவனம் சிதறுவதனை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நாம் முழுவதுமாக அமர்ந்து இருப்பது வகுப்பறையில், ஆனால் நம் கண் முன்னே நமது வகுப்பாசிரியர் பாடம் நடத்தி கொண்டிருப்பார்.  அவரையெல்லாம் கடந்து நம் மனம் எங்கோ ஒரு உலகில் மிதந்து கொண்டிருக்கும். நம் படிப்பில் மட்டுமல்லாது, இயல்பு வாழ்க்கையிலும் இது நடந்து கொண்டு தான் இருக்கும்.ஒரு வேலையை செய்து கொண்டிருப்போம் ஆனால் நம் மனம் வேறு எதையோ பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கும். ஏன் ? இதெல்லாம் நடக்கிறது? ஏன் நம் மனம் எப்பொழுதும் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது? இதனை எப்பொழுதாவது சிந்தித்து பார்த்து இருக்கிறீர்களா? காரணம்: மனம் எப்பொழுதும் சுகவாசியாகவே இருக்க விரும்புகிறது. பிடிக்காத ஒரு வேலையையோ அல்லது ஏதோ ஒரு விசயத்தையிலோ நம் ஈடுபடும் பொழுது நம் மனம் அதனை ஏற்க மறுக்கிறது. மனது எப்பொழுதும் குதுகளமாகவே இருக்க விரும்புகிறது. ஆட்டம் போடவே அது எப்பொழுதும் விரும்புகிறது. இதுவே...

நேரமும் ஆற்றலும்

படம்
 நேரம்:- நேரம் என்பது மனித வாழ்வில் மதிப்பிட முடியாதது. எவன் தன் வாழ்வில் நேரத்தை மிக சரியான முறையில் செலவிடுகிறானோ அவனே வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைகிறான். இதன் பொருள் 24 மணி நேரமும் உழைப்பதும் அல்ல. ஓய்வு என்ற பெயரில் நேரத்தைக் கடத்துவதும் அல்ல. மாறாக வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து அனுபவங்களை கற்றுக் கொண்டு மீண்டு வாழ்க்கையின் இயல்பிற்கு திரும்புவதாகும். இதற்கு மிகப் பெரிய ஒரு மனோபாவம் தேவைப் படுகிறது. தவறு நிகழ்ந்து விட்டால் எதனால் நிகழ்ந்தது என்று ஆராய்ந்து நம் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அதனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். முழு மனதுடன் ஏற்றுக் கொண்டால் ஒழிய நாம் கசப்பான விசயங்களை கடக்க முடியும். நம் நேரத்தையும் நாம் பேணி காக்க முடியும். இப்போது ஒரு உதாரணத்தை பார்ப்போம். நீங்கள் ஒரு அரசு ஊழியராக வேண்டும் என்று போட்டித் தேர்வுக்கு படித்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கொள்வோம். நீங்கள் ஒரு பேருந்தில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் தவறுதலாக ஒருவரை இடித்து விடுகிறீர்கள். உடனே அவர் உங்கள் மோசமான வார்த்தைகளில் சண்டைக்கு வருகிறார் என்றால் நீங்கள் அமைதி காக்க வ...

மனம் ஒரு மகா சக்தி. பேராற்றலின் மையமும் அதுவே....

படம்
பொதுவாகவே மனதினை ஒருமுகப் படுத்தி ஒரு வேலையை செய்தால் அந்த வேலை சிறப்பாக வரும் என்று பலர் சொல்லி கேள்வி பட்டிருப்போம். ஆம். மனிதனின் ஆற்றல் மையம் அதுவே.  நாம் என்ன தகவல் கொடுக்கிறோமோ அதனை பொறுத்தே நமக்கான சிந்தனைகள் வெளிப்படுகிறது. இப்பொழுது நீங்கள் ஒரு மாணவராக இருந்தால் இப்படி வைத்து கொள்வோம், உங்களுக்கு தேர்வு உள்ளது, நீங்கள் படிக்காமல்  ஒரு வெப் தொடர் ஒன்றை பார்த்து கொண்டிருக்கிறீர்கள். சிறிது நேரம் படிக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். நீங்கள் தேர்வு அறையில் தேர்வு எழுதக் கொண்டிருக்கும் போது நீங்கள் படித்த விசயங்களை விட அந்த வெப் தொடரின் காட்சிகளும், டயலுக்கும் தான் அதிகமாக உங்கள் நினைவில் வந்து கொண்டுருக்கும். ஆகையால் உங்கள் மனதிற்கு என்ன மாதிரியான தகவல்களை நீங்கள் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். 

என்னவாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதுவாக பரிணமிக்க ஆரம்பியுங்கள்

படம்
உங்கள் வாழ்க்கையில் எந்த நிலையை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதுவாக பரிணமிக்க தொடங்குங்கள். ஒரு சாதாரண பட்டுப் புழு எவ்வாறு பட்டாம் பூச்சியாக மாறுகிறது என்றால் தன்னை அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்ல அது தயாராகிறது. அது தன்னை சுற்றி ஒரு கூடு ஒன்றை கட்டிக் கொள்கிறது. அந்த கூட்டிற்க்குள் தன்னை வருத்திக் கொண்டு சில காலம் அதனுள்ளே இருக்கிறது. பிறகு அது பட்டாம் பூசியாக உருவெடுக்கிறது. இதே நிலைபாடு தான் நமக்கும். நீங்கள் உண்மையாகவே ஒன்றை அடைய விரும்பினால் அதுவாக வாழ ஆரம்பித்து விடுங்கள்.....

எந்த அளவிற்கு ஒன்றிணைய போகிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு ரிசல்ட் கிடைக்கும்

படம்
வெற்றி பெறுவது என்பது திட்டமிட்டு கடினமாக உழைத்தால் போதுமானது. ஆனால் அதையும் தாண்டி உங்களுக்கு வேற ஏதோ ஒன்று வேண்டுமானால் அதற்கு உங்கள் ஆன்மாவை விலையாக கொடுக்க வேண்டும். சமைப்பது என்பது வழக்கமானது தான். அதில் கொஞ்சம் சுவையை சேர்ப்பது தான் சிக்கலான விசயம். ஒரு இரவு உணவுக்கே இவ்வளவு தயாரிப்பு இருக்கிறது என்றால் நீங்கள் நினைத்ததை அடைய இவ்வளவு விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்பதனை மட்டும் நினைத்து பாருங்கள். உங்களின் துறையுடன் வளர்வது என்பது இயல்பான ஒன்று. உங்கள் துறையை வளர்தெடுப்பது என்பது ஒன்று. ஒரு துறையால் நீங்கள் வளர்ந்தீர்கள் என்பது ஒரு புறம் . ஒரு துறை உங்களால் வளர்ந்தது என்பது ஒரு புறம். நீங்கள் எதனை தேர்ந்தெடுக்க போகிறீர்கள்? நீங்கள் எவ்வளவு பெரிய இலக்கினை உங்களுக்கு நிர்ணயிக்க போகிறீர்கள். இதனால் தான் விவேகானந்தர் கூறுகிறார் " உயர்ந்த இலட்சியங்கள் மற்றும் சிந்தனைகளை கொண்டு உங்கள் உள்ளத்தினை நிரப்பிடுங்கள் என்று. இப்போது ஒரு 25 கிலோ எடையை தூக்குவதற்கு தயாராகிறீர்கள் என்றால் உங்களுடைய வலிமை எப்படி இருக்கும் . 50 கிலோ எடையை தூக்குவதற்கு தயாராகிறீர்கள் என்றால் உங்க...