நீங்கள் மேம்பட விரும்பினால் முதலில் வாழ்க்கை உங்களை சுக்கு நூறாக உடைக்கும்.
பல நேரங்களில் நாம் பலவிதமான பிரச்சினைகளில் இருந்தோ தோல்விகளில் இருந்தோ நாம் வெளி வந்திருப்போம். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையில் இந்தப் பிரச்சினைகள் ஓயாவே ஓயாது.
உதாரணமாக 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எடுத்துக் கொள்வோம். நமது ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் என எல்லோரும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நமக்கு சொல்லி இருப்பார்கள். "இந்த 10ஆம் வகுப்புத் தேர்வை மட்டும் நல்ல படியாக எழுதி முடித்து விடுப்பா அப்பறம் நல்ல ஊர் சுற்றலாம் என்று". அப்பறம் 12ஆம் வகுப்பு, கல்லூரி என்று நீண்டுக் கொண்டே போய் கொண்டிருக்கும்.
ஆனால் அடுத்தடுத்து பிரச்னைகள் வந்து கொண்டே தான் இருக்கும். அது தீரவே தீராது. நாம் வாழ்க்கையில் முன்னேறி செல்ல செல்ல புதிய அறிவு தேவைபடும். அதனால் தான் அந்த அறிவிற்காகவும், அனுபவத்திற்காகவும் வாழ்க்கை நமக்கு பிரச்சினைகளை வழங்குகிறது.
நாம் கொஞ்சம் சிரத்தையுடன் அந்த பிரச்சினைகளை கையாள வேண்டும். வெற்றியோ,தோல்வியோ அதை துணிவுடன் எதிர் கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தின் நியதியே அது தான்.
.jpeg)
கருத்துகள்