எந்த அளவிற்கு ஒன்றிணைய போகிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு ரிசல்ட் கிடைக்கும்

வெற்றி பெறுவது என்பது திட்டமிட்டு கடினமாக உழைத்தால் போதுமானது. ஆனால் அதையும் தாண்டி உங்களுக்கு வேற ஏதோ ஒன்று வேண்டுமானால் அதற்கு உங்கள் ஆன்மாவை விலையாக கொடுக்க வேண்டும்.


சமைப்பது என்பது வழக்கமானது தான். அதில் கொஞ்சம் சுவையை சேர்ப்பது தான் சிக்கலான விசயம்.
ஒரு இரவு உணவுக்கே இவ்வளவு தயாரிப்பு இருக்கிறது என்றால் நீங்கள் நினைத்ததை அடைய இவ்வளவு விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்பதனை மட்டும் நினைத்து பாருங்கள்.


உங்களின் துறையுடன் வளர்வது என்பது இயல்பான ஒன்று. உங்கள் துறையை வளர்தெடுப்பது என்பது ஒன்று.

ஒரு துறையால் நீங்கள் வளர்ந்தீர்கள் என்பது ஒரு புறம் . ஒரு துறை உங்களால் வளர்ந்தது என்பது ஒரு புறம். நீங்கள் எதனை தேர்ந்தெடுக்க போகிறீர்கள்?


நீங்கள் எவ்வளவு பெரிய இலக்கினை உங்களுக்கு நிர்ணயிக்க போகிறீர்கள். இதனால் தான் விவேகானந்தர் கூறுகிறார் " உயர்ந்த இலட்சியங்கள் மற்றும் சிந்தனைகளை கொண்டு உங்கள் உள்ளத்தினை நிரப்பிடுங்கள் என்று.

இப்போது ஒரு 25 கிலோ எடையை தூக்குவதற்கு தயாராகிறீர்கள் என்றால் உங்களுடைய வலிமை எப்படி இருக்கும் .

50 கிலோ எடையை தூக்குவதற்கு தயாராகிறீர்கள் என்றால் உங்களுடைய வலிமை எப்படி இருக்கும்.

100 கிலோ எடையை தூக்குவதற்கு தயாரானால் எப்படி நீங்கள் இருப்பீர்கள்.

எனவே எவ்வளவு  எடையை தூக்கப் போகிறீர்கள் என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

கருத்துகள்