ஆழ்ந்து கவனிக்கும் கலை பகுதி -2

 நாம் முந்தைய பதிவில் பார்த்ததை சற்று நினைவு கூறுவோம்.


 எண்ணங்கள் மனதை ஆக்கிரமிப்பு செய்து இருந்தால் நம்மால் கவனிக்க இயலாது. 


நம் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு சம்பவம் நமக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். நம் மனம் அதையே நினைத்துக் கொண்டு அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கும் பொழுது நம்முடைய சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் அதன் மீதே இருக்கும். மனம் வெறுமையாக இருக்கும் போதோ அல்லது அமைதியாக இருக்கும் பொழுது மட்டுமே நம்மால் கவனிக்க இயலும்.


இது என் வாழ்வின் சொந்த அனுபவம். நான் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் எனக்கு என் சக தோழியின் மீது ஈர்ப்பு இருந்தது.

நான் அவளிடம் எப்போதும் பேசிக் கொண்டு ஊர் சுற்றிக் கொண்டு இருப்பேன். தேர்வு நேரங்களில் புத்தகங்களை திறந்து வைத்துக் கொண்டு அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டே இருப்பேன். என்னால் படிக்க இயலாது. தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைந்து தமிழ், ஆங்கிலம், தவிர மற்ற அனைத்துப் பாடங்களிலும் தோல்வி தான்.



அவளைப் பற்றி நினைப்பது சுகமாக இருக்கும். ஆனந்தமாக இருக்கும். அவளைப் பற்றி நினைக்கையில் சிரிப்பு வரும். 24 மணி நேரமும் இதே வேலை தான் .


   






உங்களுக்கு சாதகமான விசயங்களை மனம் உங்களுக்கு எண்ணங்களாக அனுப்பி கொண்டே இருக்கும். நாம் அதற்கு ஆட்படுகையில் நம்மால் எதிலுமே கவனம் செலுத்த இயலாது.முந்தைய பதிவில் கூறியது போன்று மனம் எப்போதும் சுகவாசியாகவே இருக்க விரும்புகிறது.


முதலில் பாடங்களையோ அல்லது ஏதோ ஒன்றிணையோ கவனிக்க தயாராகும் பொழுது நாம் நம் மனதினை கவனிக்க வேண்டும். நம்முடைய எண்ணங்களைக் கவனிக்கத் தொடங்க வேண்டும். தொடர்ந்து எண்ணங்கள் வந்த கொண்டே தான் இருக்கும். மிக பொறுமையுடன் நம் அதனை கவனிக்க வேண்டும். படி படியாக எண்ணங்கள் குறையத் தொடங்கும்.

பின்னர் நாம் நினைக்கும் விசயங்களில் எளிதாக கவனம் செலுத்தலாம். எண்ணங்கள் எல்லாம் வந்து கொண்டே தான் இருக்கும், அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து அதனை நாம் கவனித்துக் கொண்டே தான் இருக்க வேண்டும்.


புத்தர் கூறுகிறார். 

      

கவனியுங்கள் ஆனால் ஆழ்ந்து விடாதீர்கள் என்று..


வருகிற எண்ணங்களுக்கும் நமக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. ஆனால் நாம் வருகிற எண்ணங்களுடன் சார்ந்து கொண்டு நாம் வாழ்வில் மூக்கால் வாசி நேரம் அதன் படியே நடந்து கொண்டு இருக்கிறோம். எனவே தொடர்ந்து மனதினை கவனிக்க தொடங்குங்கள்.







கருத்துகள்