நேரம்:-
நேரம் என்பது மனித வாழ்வில் மதிப்பிட முடியாதது. எவன் தன் வாழ்வில் நேரத்தை மிக சரியான முறையில் செலவிடுகிறானோ அவனே வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைகிறான். இதன் பொருள் 24 மணி நேரமும் உழைப்பதும் அல்ல. ஓய்வு என்ற பெயரில் நேரத்தைக் கடத்துவதும் அல்ல.
மாறாக வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து அனுபவங்களை கற்றுக் கொண்டு மீண்டு வாழ்க்கையின் இயல்பிற்கு திரும்புவதாகும். இதற்கு மிகப் பெரிய ஒரு மனோபாவம் தேவைப் படுகிறது. தவறு நிகழ்ந்து விட்டால் எதனால் நிகழ்ந்தது என்று ஆராய்ந்து நம் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அதனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். முழு மனதுடன் ஏற்றுக் கொண்டால் ஒழிய நாம் கசப்பான விசயங்களை கடக்க முடியும். நம் நேரத்தையும் நாம் பேணி காக்க முடியும்.
இப்போது ஒரு உதாரணத்தை பார்ப்போம்.
நீங்கள் ஒரு அரசு ஊழியராக வேண்டும் என்று போட்டித் தேர்வுக்கு படித்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கொள்வோம். நீங்கள் ஒரு பேருந்தில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் தவறுதலாக ஒருவரை இடித்து விடுகிறீர்கள். உடனே அவர் உங்கள் மோசமான வார்த்தைகளில் சண்டைக்கு வருகிறார் என்றால் நீங்கள் அமைதி காக்க வேண்டும்.
மாறாக நீங்களும் அவருடன் வாதிட கூடாது. உங்கள் ஆற்றலும் நேரமும் இப்படி ஒரு ஒரு வழிகளில் உங்களை விட்டு செல்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே உங்கள் ஆற்றலும் நேரமும் குறித்து விழிப்புடன் இருங்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு மணி துளி குறித்தும் எச்சரிக்கை உடன் இருங்கள். நடந்ததை குறித்து வருத்தப் படாமல் இங்கு இருந்து எப்படி உங்களை முன்னேற்றி செல்வது என்று சிந்தியுங்கள்.
***************************

கருத்துகள்