சலிப்புணர்வு (Boredom)
இன்றைய உலகத்தில் சலிப்புணர்விற்கே இடமில்லாமல் போயிற்று. ஒரு வரிசையில் நிற்கிறோம் என்றால் அதற்குள் கைபேசியில் ஏதாவது ஒன்றை பார்க்க தொடங்கி விடுகிறோம்.
உணவு உண்ணும் போதும் கைபேசியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். சும்மா ஒரு அரை மணி நேரம் இருக்க முடிவதில்லை. இன்றைய நவீன உலகில் கைபேசி நிறைய இடங்களை ஆக்கிரமித்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.
மனிதன் ஒரு விசயத்தை சிரமேற்கொண்டு செய்ய விரும்பினால் இந்த சலிப்புணர்வையோ அல்லது பொறுமையையோ அல்லது சகிப்புத்தன்மையையோ நிச்சயம் கையாள வேண்டும்.
கைபேசியை விடுத்து மற்ற பொழுது போக்கு அம்சங்களையும் விடுத்து மனிதன் மெதுவாக செயல் பட வேண்டும்.
ஒரு முழுமுயற்சிக்கு அல்லது நெடு நீண்ட பயணத்திற்கு இந்த சலிப்புணர்வு இன்றி அமையாது.
மற்ற மக்களுக்கு எப்படியா சாகசமான வாழ்வை தேர்ந்தெடுக்கும் பொருட்டு அல்லது அர்ப்பணிப்பு உணர்வோடு ஏதோ ஒன்றை நீங்கள் செய்ய போகிறீர்கள் என்றால் இந்த சகிப்புத்தன்மையை நீங்கள் கற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
இது வாழ்வினை சூறையாடுவது போல் தோன்றலாம் ஆனால் இறுதியில் உங்கள் பயணத்திற்கு நிச்சயமாக ஒரு அர்த்தத்தை கொடுக்கவல்லது. கொஞ்சம் வாழ்க்கையை மெதுவாக ஆக்கி கொள்ளுங்கள். உங்கள் பாதையில் நீங்கள் தான் செல்ல போகிறீர்கள். எனவே கொஞ்சம் நிதானமாக உங்கள் பயணம் குறித்த கூடுதல் புரிதலை அளிக்கும்.

கருத்துகள்