நாம் நம்முடைய வாழ்வில் நிறைய முயற்சிகளை மேற்கொண்டிருப்போம், பெரும்பாலும் அதில் தோல்விகளையே சந்தித்திருப்போம். அந்த தோல்வியின் தாக்கங்கள் நம்முள் தேங்கியிருக்கும்.
இப்பொழுது தானே ஒரு முயற்சியினை மேற்கொண்டோம், பிறகு இன்னொருநேரம் இன்னொரு முயற்சியினை மேற்கொள்வோம் என ஏற்பட்ட தோல்வியின் தாக்கம் அடுத்த முயற்சியினை எடுக்க நம்மை தாமதப் படுத்தும்.
ஏற்பட்ட தோல்வியையும், அவமானத்தையும் மறந்து இன்று ஒரு புதிய நாள் இன்று ஒரு புதிய வாய்ப்பு உள்ளது அதற்காக உழைக்க நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.
நாம் எவ்வளவு இழந்தாலும் திரும்ப முயற்சிக்க இன்னொரு வாய்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும்.
நாமாக நிறுத்தும் வரை நாம் தான் நம்முடைய எல்லை.....

கருத்துகள்