குணநலன்: வெற்றிக்கு இணையான விசயங்களை நமக்கு அளிக்கக்கூடிய பண்பு

 குணநலன்:

வாழ்க்கையில் பெரிதாக வெற்றி அடைந்தால் மட்டுமே அனைவரும் நம்மை மதிப்பர் என்ற கருத்து நம் வாழ்க்கையில் மேலோங்கி உள்ளது. ஆனால் உண்மையில் அவை எல்லாம் பலன் அளிக்கக்கூடிய ஒன்றா? வாழ்க்கையின் இறுதியில் அவற்றால் நிம்மதி ஏற்படுமா? என்று ஆராய்ந்தால் எல்லை என்ற பதிலே கிடைக்கும். 



அதற்காக எதையுமே முயற்சிக்காமல் ஒரு சோம்பேறித்தனமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று குறிப்பிடவில்லை. பெரும்பாலும் வெற்றியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிற நம்முடைய பயணத்தில் உண்மைத் தன்மையின் அளவு குறைந்துக் கொண்டே வருகிறது.




அப்பொழுது வெற்றி எப்படி இருக்க வேண்டுமெனில், யாருடைய மனதையும் புண்படுத்தாமல் , நேர்மையான முறையில் ஒரு வெற்றி அமையுமெனில் அதுவே சிறந்ததாக இருக்க முடியும். கருணை , இரக்கம், அன்பு, பரிவு இதனை விட மிகுந்த மனிதனை அழகாகக் கூடிய விசயங்கள் இவ்வுலகில் இல்லை.



உங்கள் துறையை ஆழமாக காதலியுங்கள். இந்த வெற்றித் தோல்விக்கு அப்பாற்பட்டு உழையுங்கள். வெற்றி செயற்கையானது. அன்பு இயற்கையிலே உள்ளது.

கருத்துகள்