மனம் ஒரு மகா சக்தி. பேராற்றலின் மையமும் அதுவே....

பொதுவாகவே மனதினை ஒருமுகப் படுத்தி ஒரு வேலையை செய்தால் அந்த வேலை சிறப்பாக வரும் என்று பலர் சொல்லி கேள்வி பட்டிருப்போம்.


ஆம். மனிதனின் ஆற்றல் மையம் அதுவே. 

நாம் என்ன தகவல் கொடுக்கிறோமோ அதனை பொறுத்தே நமக்கான சிந்தனைகள் வெளிப்படுகிறது. இப்பொழுது நீங்கள் ஒரு மாணவராக இருந்தால் இப்படி வைத்து கொள்வோம், உங்களுக்கு தேர்வு உள்ளது, நீங்கள் படிக்காமல்  ஒரு வெப் தொடர் ஒன்றை பார்த்து கொண்டிருக்கிறீர்கள். சிறிது நேரம் படிக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். நீங்கள் தேர்வு அறையில் தேர்வு எழுதக் கொண்டிருக்கும் போது நீங்கள் படித்த விசயங்களை விட அந்த வெப் தொடரின் காட்சிகளும், டயலுக்கும் தான் அதிகமாக உங்கள் நினைவில் வந்து கொண்டுருக்கும்.


ஆகையால் உங்கள் மனதிற்கு என்ன மாதிரியான தகவல்களை நீங்கள் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். 

கருத்துகள்