உழைப்பிற்கான பலன் தள்ளிப் போகுமே தவிர கிடைக்காமல் போகாது.
நாம், நம் வாழ்வில் நம்மை மேம்படுத்திக் கொள்வதற்காக பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். கொஞ்சம் நாள்கள் அதனை சரியாக கடைபித்துக் கொண்டும் தொடர்ந்து அந்த முயற்சிகளை செய்து கொண்டு வருகிறோம்.
நாள்கள் செல்ல , செல்ல நாம் செய்து வந்த விசயங்களையும், முயற்சிகளையும் கைவிட்டு விடுவோம். மனதின் வலி தாங்கும் மனப்பான்மையானது. தொடர்ந்து ஒரு செயலை செய்ய செய்ய தான் அதிகமாகிறது.
எனவே உங்களுடைய முயற்சிகளை நீங்கள் எப்போது நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ? அப்போது கொஞ்சம் உங்களை வலுப்படுத்தி அந்த முயற்சியினை விடாமல் தொடருங்கள். தோல்வி என்பது வெளி புறத்தில் இருந்து ஏற்படுவது அல்ல. அது உள்ளிருந்து தான் ஆரம்பமாகிறது.
எனவே உள்ளத்தினை கொஞ்சம் கடினமாக வைத்திருங்கள். அதுவே கடினமான முடிவுகளை எடுக்க உதவும். ஒரு மரமானது ஒரே வெட்டில் விழுவதில்லை. ஒவ்வொரு வெட்டுமே அந்த மரத்தினை வெட்டி வீழ்த்துவதற்கு துணை புரிகிறது.
.jpeg)
கருத்துகள்