ஒரு விசயத்தை செய்ய செய்ய தான் மெருகேற்றும்.எனவே தொடர்ந்து அதனை செய்வதற்கு ஆயத்தமாக இருங்கள்
பொதுவாக நம் வாழ்க்கையில் நம்மை மேம்படுத்திக் கொள்ள அல்லது நமது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ஒரு தொழிலையே, ஒரு பழக்கத்தையோ நாம் தொடங்குவோம். தொடங்கிய ஒன்றை தொடர்ச்சியாக செய்வது மிகவும் கடினமான காரியம். தினமும் அதை செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை நாம் ஒதுக்கி ஆக வேண்டும். தொடங்கிய போது இருந்த ஆர்வம் அதிலே குறைய தொடங்கும். செயலின் பலன்களை(results) எதிர்பார்ப்போம். உண்மையிலே உங்களுக்கு அது வேண்டுமென்றால் உங்கள் சொந்த அகத்தில் இருந்து எழும் ஒலியைக் கேளுங்கள். பிறரைப் பார்த்து தொடங்குவதை விட உங்கள் சொந்த அகத்தில் இருந்து எழும் ஓசையை கேட்டு தொடங்கினால் உங்களால் நெடு நாள் வரை அதனை எடுத்துச் செல்ல முடியும். குறிப்பாக மிகச்சிறப்பாக செய்ய வேண்டும் என்று எண்ணாதீர்கள். உங்களுக்கு எந்த அளவிற்கு தெரிகிறதோ அதை வைத்து செய்யுங்கள். பிறகு உங்களுடைய அனுபவம் ஏற ஏற உங்கள் செயல்களை மெருகேற்றுங்கள்.