பிறர் கூறுவதை காட்டிலும் உங்கள் சொந்த கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.

 வாழ்க்கையில் நாம் பல முக்கியமான தருணங்களை சந்தித்து இருப்போம். அந்த தருணத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய  கட்டாயத்தில் இருந்திருப்போம். 



இந்த சமயத்தில் தான் நம்மை சுற்றியுள்ள உறவினர்கள், நண்பர்கள் என மக்கள் அனைவரும் நம்மிடம் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களைக் கூறுவார்கள். 


இது பொதுவாக எல்லோருக்கும் நடக்கும் விசயம் தான். ஆனால் இது போன்ற பலவிதமான கருத்துக்கள் நமக்கு சந்தேகங்களையும், குழப்பங்களையும், பயத்தையும் உண்டாக்கும். 



எல்லோரும் என்ன இப்படி கூறுகிறார்கள் என்ற எண்ணம் உருவாகும். சரியான முடிவை நாம் எடுக்க வேண்டும் என்ற ஒரு செயற்கையான கட்டாயமான சூழலை நாமே நமக்கு அமைத்துக் கொள்வோம். 


இவையனைத்தும் இருக்கக்கூடிய விசயங்கள் தான். இதுபோன்ற தருணங்களில் உங்களுடைய சொந்த முடிவுகளை எடுங்கள். உங்கள் இதயத்தில் இருந்து எழக் கூடிய கருத்திற்கு முன்னுரிமை அளியுங்கள். 



உங்கள் வாழ்விற்கான முடிவுகளை நீங்களே எடுங்கள். அது எவ்வளவு பெரிய தோல்வியை அடைந்தாலும் பரவாயில்லை. அல்லது அது மிகப் பெரிய வெற்றியை அடைந்தாலும் பரவாயில்லை. உங்களுடைய வாழ்க்கையை நீங்களே தீர்மானியுங்கள்.


கருத்துகள்