ஆழ்ந்து கவனிக்கும் கலை

கவனித்தல்:-

கவனித்தல் என்பது ஒரு தனிச் சிறப்புடையது. நாம் எல்லோருமே பள்ளி கல்லூரிக்குச் சென்று இருப்போம். வகுப்புகளில் அமர்ந்து பாடங்களை கேட்டு இருப்போம். அவ்வாறு கேட்கையில் நம் கவனம் சிதறுவதனை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நாம் முழுவதுமாக அமர்ந்து இருப்பது வகுப்பறையில், ஆனால் நம் கண் முன்னே நமது வகுப்பாசிரியர் பாடம் நடத்தி கொண்டிருப்பார். 





அவரையெல்லாம் கடந்து நம் மனம் எங்கோ ஒரு உலகில் மிதந்து கொண்டிருக்கும். நம் படிப்பில் மட்டுமல்லாது, இயல்பு வாழ்க்கையிலும் இது நடந்து கொண்டு தான் இருக்கும்.ஒரு வேலையை செய்து கொண்டிருப்போம் ஆனால் நம் மனம் வேறு எதையோ பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கும். ஏன் ? இதெல்லாம் நடக்கிறது? ஏன் நம் மனம் எப்பொழுதும் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது? இதனை எப்பொழுதாவது சிந்தித்து பார்த்து இருக்கிறீர்களா?






காரணம்:

மனம் எப்பொழுதும் சுகவாசியாகவே இருக்க விரும்புகிறது. பிடிக்காத ஒரு வேலையையோ அல்லது ஏதோ ஒரு விசயத்தையிலோ நம் ஈடுபடும் பொழுது நம் மனம் அதனை ஏற்க மறுக்கிறது. மனது எப்பொழுதும் குதுகளமாகவே இருக்க விரும்புகிறது. ஆட்டம் போடவே அது எப்பொழுதும் விரும்புகிறது. இதுவே  மனதினுடைய குணாதிசயம் மற்றும் தன்மை.


சரி செய்தல்;- 

இதனை சரி செய்வது என்பது மிகவும் கடினமானது. ஒரு ஓட்டப் பந்தய வீரர் எப்படி தொடர்ந்து பயிற்சி செய்து தன்னை மெருகேற்றி வைத்துள்ளாரோ? அதே போல தொடர்ந்து மனதை கவனிப்பதன் மூலம் மனதை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வர முடியும். அமைதி , பொறுமை , சகிப்பு தன்மை இவை எல்லாவற்றையும் கைக் கொள்ள வேண்டும். மனம் உண்மையில் ஒரு அற்புதமான சக்தி. மேற்கூறிய விசயங்களை நம் மனதில் விதைபதன் மூலம் மனம் கட்டுக்குள் வரும். பெரும்பாலான தவறுகளுக்கு மனம் மூலமாக இருக்கிறது. எல்லாம் தொடங்கும் இங்கு தான். 




மனதினை தொடர்ந்து கவனிக்க மனம் அமைதி அடையும் . எண்ணங்கள் எல்லாம் மறையும் . எளிதாக ஒரு விசயத்தில் கவனத்தை செலுத்த முடியும்.எந்த எண்ணத்தை நீங்கள் விதைக்க நினைக்கிறீர்களோ முதலில் அதனை தயார் செய்துக் கொள்ளுங்கள். பிறகு ஆக்கிரமிப்பு செய்துக் கொண்டிருக்கும் எண்ணங்களை கவனியுங்கள். கவனித்தாலே போதுமானது. பிறகு எண்ணங்கள் தானாக மறையும். பிறகு நீங்கள் நினைக்கும் செயலை தொடங்குங்கள்.





கருத்துகள்