தோல்விகளை குறித்து கவலைப்பட வேண்டாம் - ஹர்ஷா போக்லே

 தோல்விகளை குறித்துக் கவலை கொள்ள வேண்டாம் - ஹர்ஷா போக்லே கருத்து தெரிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட்டின் சிறந்த வர்ணனையாளர்களில் ஒருவர் ஹர்ஷா போக்லே. தற்போது அவர் பேசியுள்ள வீடியோ ஒன்று வலை தளங்களில் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறீர்களா? அதை குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கூறுகிறார்.



இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் ராகுல் டிராவிட் 604 இன்னிங்ஸ் இந்திய அணிக்காக பேட்டிங் செய்து இருக்கிறார். அதில் 410 இன்னிங்ஸ் 50 ரன்களுக்கும்  குறைவாக ஆடியுள்ளார். மீதமுள்ள ஆட்டங்களில் மட்டுமே அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். 



ரோஜர் பெடரர், மைக்கேல் ஜோர்டன் போன்ற சிறந்த வீரர்கள் தங்கள் ஆடிய ஆட்டங்களில் பல முறை தோல்வியையே தழுவி உள்ளனர். அவர்கள் வெற்றிப் பெற்றதை விட அவர்கள் அடைந்த தோல்விகளே அதிகம் தொடர்ந்து போராடி அவர்கள் சில கோப்பைகளையும் பட்டங்களையும் வென்றிருக்கிறார்கள் 



எனவே ரிசல்ட்களை குறித்து கவலைக் கொள்ளாமல் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருங்கள் அது எந்த துறையாக இருக்கட்டும். உங்கள் துறையோடு இணைந்து வாழ்ந்து வாருங்கள். பிறகு எல்லாமே நடக்கும். இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசி உள்ளார்.

கருத்துகள்