ஆழ்ந்து கவனிக்கும் கலை பகுதி -2
நாம் முந்தைய பதிவில் பார்த்ததை சற்று நினைவு கூறுவோம். எண்ணங்கள் மனதை ஆக்கிரமிப்பு செய்து இருந்தால் நம்மால் கவனிக்க இயலாது. நம் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு சம்பவம் நமக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். நம் மனம் அதையே நினைத்துக் கொண்டு அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கும் பொழுது நம்முடைய சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் அதன் மீதே இருக்கும். மனம் வெறுமையாக இருக்கும் போதோ அல்லது அமைதியாக இருக்கும் பொழுது மட்டுமே நம்மால் கவனிக்க இயலும். இது என் வாழ்வின் சொந்த அனுபவம். நான் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் எனக்கு என் சக தோழியின் மீது ஈர்ப்பு இருந்தது. நான் அவளிடம் எப்போதும் பேசிக் கொண்டு ஊர் சுற்றிக் கொண்டு இருப்பேன். தேர்வு நேரங்களில் புத்தகங்களை திறந்து வைத்துக் கொண்டு அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டே இருப்பேன். என்னால் படிக்க இயலாது. தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைந்து தமிழ், ஆங்கிலம், தவிர மற்ற அனைத்துப் பாடங்களிலும் தோல்வி தான். அவளைப் பற்றி நினைப்பது சுகமாக இருக்கும். ஆனந்தமாக இருக்கும். அவளைப் பற்றி நினைக்கையில் சிரிப்பு வரும். 24...