இடுகைகள்

ஏப்ரல் 20, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அழகர் வருவாரா? நடக்குமா சித்திரை திருவிழா...?

படம்
  சித்திரை திருவிழா என்பது தமிழகத்தில்  பிரசித்திப் பெற்ற திருவிழா ஆகும். விழாவின் சிறப்பே அழகர் வைகையில் எழுந்தருளுதல் தான்.சென்ற வருடம்  கொரோனா நோய் பரவல் காரணமாக விழா நடை பெறாமல் போய் விட்டது.  இந்த வருடமும் அதே கதை தான் தொடர்கிறது. இதனால் பக்தர்கள் சார்பில் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. நீதிபதிகள் சிவஞானம்,ஆனந்தி முன்பு நேற்று விசாரனைக்கு வந்தது.  கொரோனா நோய் தொற்று தீவிரமாக உள்ள நிலையில் விழாவை  பாதுகாப்பாக நடத்தமுடியாது என்றனர் நீதிபதிகள். பின்னர் மனுதாரர்களின் வக்கில் ஆஜராகி விழாவை பக்தர்கள் இல்லாமல் நடத்தி,தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாவது வெளியிட வேண்டும் என்றனர்.அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கையும் தள்ளுபடி செய்தனர்

அருண் விஜயின் அடுத்த படம் ,முதல் பார்வை வெளியானது

படம்
  அருண்விஜய் தற்போது அறிவழகனுடன் இணைந்து பணி புரிந்து வருகிறார். குற்றம் 23 தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். படத்திற்க்கு பார்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.படத்தை ஆல் இன் ஆல்  தயாரிப்பு நிறுவனர் விஐய் ராகவேந்திரா தயாரிக்கிறார்.இப்படம் ஸ்பை  த்ரில்லர் படமாக இருக்கம் என்று இயக்குனர் கூறுகிறார். .தற்போது படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. படத்திற்க்கு பார்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.படத்தை ஆல் இன் ஆல்  தயாரிப்பு நிறுவனர் விஐய் ராகவேந்திரா தயாரிக்கிறார்.இப்படத்தின்  நாயகியாக ரெஜினா கேசன்ட்ரா அறிமுகமாகிறார்.குற்றம் 23 படத்தை  காண்கையில் மருத்துவ த்ரில்லராக இருந்தது, பார்டர் படத்தை பொருத்த  வரையில் ஸ்பை த்ரில்லாக தயாரித்து உள்ளனர், தீவிரவாதத்தை  எதிர்ப்பதுப் போன்றும் தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையிலும் படத்தின் கதை களம் அமைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.