பொதுவாக நம் எல்லோருக்கும் சில கனவுகள் இருக்கும் அல்லது புதிய முயற்சிகளை தொடங்க வேண்டும் அல்லது புதிய பழக்கங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வாழ்க்கையில் நம்மை மேம்படுத்திக் கொள்ள நாம் புதிய முயற்சிகளைத் தொடங்குவோம்.
உதாரணமாக, காலையில் உடற்பயிற்சி செய்வது, நடைபயிற்சி மேற்கொள்வது போன்ற விசயங்களில் தொடங்கி தொழில் தொடங்குவது, இணைய தளங்களில் உங்களுக்கு என்று ஒரு புதிய பக்கத்தை உருவாக்குவது போன்ற விசயங்களாகட்டும். இதற்கெல்லாம் ஒரு நேரம் வரட்டும், பார்த்துக்கொள்வோம் என்று விட்டு விடுவோம்.
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தொழில் தொடங்குவது, மற்றும் கனவுகளை நோக்கிய பயணத்தைத் தொடங்குவது போன்ற நல்ல விசயங்களுக்கு நல்ல நாளையும் நல்ல நேரத்தையும் எதிர்ப் பார்த்துக் காத்துக் கொண்டிருப்போம்.
உடற்பயிற்சி கூடத்திற்கு (GYM) செல்வதற்கு சரியான உடைகள் இல்லையே என்று எண்ணுவது. தொழில் தொடங்க போதுமான முதலீடு அல்லது இடமோ இல்லை என்று காத்திருப்பது. இவையெல்லாம் நேர விரயமாக்க கூடாது.
இருக்கின்ற உடைகளை வைத்துக் கொண்டு உடற்பயிற்சிக்கு செல்லுங்கள். இருக்கின்ற முதலீட்டை வைத்துக் கொண்டு எப்படியாவது உங்களை தொழிலை தொடங்குங்கள்.
நாட்கள் செல்ல செல்ல எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாக செல்ல ஆரம்பமாகும். எனவே எதனைப் பற்றியும் கவலை படாமல் தொடங்குங்கள்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-4729731706535973"
crossorigin="anonymous"></script>


கருத்துகள்