தொடர்பயிற்சி அனைத்தையும் வெல்லும். விடாது தொடர்ந்து அடிக்கும் அலையே பெரும்பாறையை கரைக்கும்.

 பயிற்சி, பயிற்சி , பயிற்சி 


நாம் நமது வாழ்க்கையில் நமக்கென்று சில கனவுகளையும், இலக்குகளையும் வைத்துக் கொள்கிறோம். நம்முடைய கனவுகளுக்காக எந்த அளவு உழைக்க வேண்டும் என்பதனை நாம் அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. பல நேரங்களில் நாம் தொடர்ந்து உழைப்பதனை தவறவிடுகிறோம்.



முதலில் நம் மனதினை நாம் பழக்க வேண்டும். நம்முடைய மனதினை பண்படுத்த வேண்டும் , ஏனென்றால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று மனம் அவ்வப்போது நம்முடைய கனத்தை திசை திருப்பி விடுகிறது. எனவே நம்முடைய மனதினை தொடர்ந்து பயிற்று வித்து பண்படுத்த வேண்டும்.





கடலில் ஏற்படும் அலையானது எவ்வாறு தொடர்ந்து வந்து கரையில் இருக்கும் பாறையின் மோதி பாறையைக் கரைப்பது போன்று தொடர்ந்து நாம் நம்முடைய மனதினை பயிற்று வித்து பண்படுத்த வேண்டும்.


உறுதியான மனதில் இருந்தே உறுதியான எண்ணங்களும் உறுதியான முடிவுகளும் பிறக்கும். எல்லாவற்றிற்கும் முதன்மையானது மனம் தான் 


தொடர் பயிற்சியின் மூலமே இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இதனால் ஒழிய தொடர்ந்து போராடவும், சகிப்பு தன்மையுடன் இருக்கவும் முடியும்.



கருத்துகள்