இடுகைகள்

10 வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு இப்படி ஒரு சலுகையா?

படம்
10 வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் தனக்கு விருப்பப்பட்ட பாட பிரிவை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.மதிப்பெண் அடிப்படையில் பாட பிரிவுகளை கொடுத்து வந்த நிலையில்,தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி அடைந்ததால் மாணவர்கள் தனக்கு விருப்பப்பட்ட பாட பிரிவை எடுத்துக் கொள்ளலாம். இந்த சூழலில், +1 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் 3-ம் வாரத்தில் அப்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், வகுப்புகள் தொடங்க்கப்பட உள்ளன. இது தொடர்பாக நேற்று முன் தினம் தமிழக பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில், தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைப் பாடப்பிரிவுகளில் ஏற்கனவே மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படும் எண்ணிக்கைக்கு உட்பட்டு மாணவர் சேர விரும்பும் பாடப்பிரிவுகளை மாணவர்களுக்கு ஒதுக்க உத்தரவிட்டுள்ளது.  அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல், மாணவர் சேர்க்கை கோரும் நிலையில், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக மாணவர் சேர்க்கையை நடத்திடவும் உத்தரவிட்டுள்ளது. மேல...

இந்த கிரிக்கெட்டர் மட்டும் எப்படி இப்படி சாதனைகளை எட்டுகிறார்.....?

படம்
 உலகிலேயே அதிக ரசிகர்கள் பலம் உள்ளவர் சச்சின்.தற்போது அதனை சமன் செய்துள்ளவர் தோனி.ஆனால் இவர்களை சமுக வலைதளங்களில் குறைவான அளவு மக்களே பின் தொடர்-கின்றனர். விராட் கோலியை  மட்டும் சமுக வலை தளங்களில் இவர்கள் இருவரை காட்டிலும் அதிகமாக மக்கள்  பின்      தொடர்கிறார்கள்.தற்போது விராட் கோலி 125மில்லியன் பாலேவர்ஸை கொண்டு உள்ளார்.இவ்வளவு பாலேவர்ஸை சம்பாதித்த முதல்  கிரிக்கெட்டர் இவர்தான். இந்தியாவில் கூட யாரும் இந்த சாதனையை புரிந்தது இல்லை .ஏன் ஆசியாவில் கூட இதனை சமன்  செய்ய ஆள் இல்லை என்று தான் செல்ல  வேண்டும். இரண்டு மாதங்களில் 25மில்லியன் பின்தொடர்பவர்களை சம்பாரித்தது கவனிக்கதக்கது.

திருடுவது தவறில்லை....

படம்
கொலைகாரனை கூட மதிப்பு பார்வையுடன் பார்க்கும் இந்த சமூகம் ஒரு திருடனை ஏளன பார்வையில் பார்க்கும். திருட்டு என்பது ஒரு ஏளனமான விஷயமும் கிடையாது. அதே சமயத்தில் எளிதான விஷயமும் கிடையாது.நாம் அனைவரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது எதையாவது திருடி இருப்போம்.நேரத்திற்குத் தகுந்தாற்போல் திருடும் பொருளின் விதம் மாறுபடுகிறது. இங்கே எல்லோரும் சூழலின் கட்டாயத்தினால் தான் திருடி கிறோம். யாரவது பிறப்பில் இருந்தே திருட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பார்களா? சந்தர்ப்ப சூழலால் மட்டுமே திருடர்கள் திருடர்களாக ஆக்க படுகிறார்கள்.எல்லோருக்கும்.எல்லாம் கிடைத்து விட்டால் யாராவது திருடுவர்களா? மனிதர்களும் விலங்குகள் தான். ஆனால் எந்த  விலங்குகளும் திருடுவது கிடையாது.  மனிதன் மட்டும் எல்லாவற்றையும் திருடி கொண்டு தானும் விலங்கு தான் என்பதை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். திருடுங்கள் நல்லதை.......

புதிதாக தோன்றிய பூஞ்சை தொற்று எளிதாக அனைவருக்கும் பரவும் அபாயம்

படம்
 இந்தியாவில் கொரோனா தொற்று 2வது அலை வேகமெடுத்து உள்ளது.இப்போது மியூகோர்மைகோஸிஸ் எனும் பூஞ்சையால் கருப்பு பூஞ்சை தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கத்தி போய் வாள் வந்த கதை போல புதிய நோய் தொற்று வேகமாக பரவுகிறது. இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.இந்த தொற்றை கட்டு படுத்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றை சமாளிக்க முடியாமல் உள்ள நிலையில் இப்போது கருப்பு பூஞ்சை தொற்று பெரும் சவாலக உள்ளது. இது தொடர்பாக சுகாதார துறை செயலாளர் லவ் அகர்வால் மாநில யூனியன் பிரதேச அரசுக்கு கடிதம் அனுப்பினார்.  அதில், புதிய பூஞ்சை தொற்று கொரோனா நோயாளிகளிடமிருந்தும் ஸடீராய்டு சிகிச்சை நோயாளிடம் இருந்து இந்த தொற்று காணப்படுகிறது. இதனால் உயிரிழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மத்திய அரசு பரிசோதனை சிகிச்சை ஆகியவற்றை கட்டாயமாக்கி உள்ளது. அரசுடன் பொது மக்களும் ஒத்துழைப்பு  தருமாறு  பணித்துள்ளது.

ஏபிடிவிலியர்ஸ் திரும்ப வரமாட்டாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.....

படம்
 தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சூறாவளி பேட்ஸ்மேன் டிவிலியர்ஸ்.இவர் அணியில் இருந்து ஓய்வு பெறகிறேன் என்று அறிவித்து அணியில் இருந்து  விடை பெற்றார்அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் இவர்.தற்போது இவர் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியில் ஆடி வருகிறார். இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடர் நடை பெற உள்ளது. தென் ஆப்பிரிக்க அணியும் இன்னும் ஒருமுறை கூட டி20 கோப்பையை கூட கைபற்றவில்லை எனும் சோகம்  தொடர்ந்து வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் டிவிலியர்சிடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.  மீண்டும் தேசிய அணியில் இணைந்து விளையாடுமாறு ரசிகர்களிடமிருந்து ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.இதற்கு டிவிலியர்ஸிடம் இருந்து எந்த  ஒரு அதிகாரபூர்வமான தகவலும் வெளி ஆக வில்லை.ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஏ பி டிவிலியர்ஸை மீண்டும் அணணியில் சேர்க்க முடியாது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டது.இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து எதிர்காலத்தில் சிறந்த ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.தென் ஆப்ரிக்க கிரிக்கெட்  வாரியம் இவ்வாறு தெ...

சூரரைப் போற்று படத்திற்க்கு மூன்றாவது இடம்???

படம்
சூர்யா நடித்து பெண் இயக்குனர் சுதா கங்கோரா இயக்கத்தில் வெளியான படம் சூரரைப் போற்று.இ்ந்த படம் கடந்த வருடம் இறுதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் சிறிது உண்மையையும் நிறைய கற்பனைகளையும் கலந்து தயாரிக்கப்பட்டது.சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ்,ஊர்வசி ஆகியோர் நடித்து உள்ளனர். ஒரு சாதாரண மனிதன் அவனுடைய கனவை வென்றெடுத்தானா என்பதே கதையின் கரு. இந்நிலையில் ஐ.எம்.டி.பி  சிறந்த படங்களி்ன் பட்டியலை வெளியிட்டது.  இதில் சூர்யா நடித்த படம் தேர்வானது.  படத்தின் ரேட்டிங் 9.1/10 . அதுமட்டுமின்றி 3வது சிறந்த படமாகவும் தேர்வானது. தமிழ் சினிமா வரலாற்றில் இது மிகப் பெரிய வெற்றி. மற்ற முன்ணணி நடிகர்கள் செய்யததை நடிகர் சூர்யா செய்து காட்டியுள்ளார். சூரரைப் போற்று மூன்றாவது படமாக தேர்வானதை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உலகின் சிறந்த படங்களில் ஒன்று- தி ஷாவ்ஷாங்க் ரிடெம்சன்

படம்
இந்த படத்தை பார்ப்பதற்கு நீங்கள் மிக பொறுமையாக இருக்க வேண்டும். ஒரு காரியம் வெற்றியடைய எவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டுமோ அவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டும்.ஒரு சிறந்த படைப்பு என்று தான் சொல்ல வேண்டும்.உலகின் வலி அனைத்தும் உங்களுக்குள் கடத்தப்படும் என்று நினைக்கிறேன். படத்தினை அவ்வளவு அருமையாக செதுக்கி இருக்கிறார்கள்.படத்தின் கதை என்ன என்று பார்த்தால் அதை நான் முன்னரே சொல்லிவிட்டேன். இது ஒரு மனதை ஊக்குவிக்கும் படம் என்று கூட சொல்லலாம்.உண்மையிலேயே இது இரு சிறந்த படம் தான்.....