திருடுவது தவறில்லை....

கொலைகாரனை கூட மதிப்பு பார்வையுடன் பார்க்கும் இந்த சமூகம் ஒரு திருடனை ஏளன பார்வையில் பார்க்கும். திருட்டு என்பது ஒரு ஏளனமான விஷயமும் கிடையாது. அதே சமயத்தில் எளிதான விஷயமும் கிடையாது.நாம் அனைவரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது எதையாவது திருடி இருப்போம்.நேரத்திற்குத் தகுந்தாற்போல் திருடும் பொருளின் விதம் மாறுபடுகிறது.





இங்கே எல்லோரும் சூழலின் கட்டாயத்தினால் தான் திருடி கிறோம். யாரவது பிறப்பில் இருந்தே திருட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பார்களா? சந்தர்ப்ப சூழலால் மட்டுமே திருடர்கள் திருடர்களாக ஆக்க படுகிறார்கள்.எல்லோருக்கும்.எல்லாம் கிடைத்து விட்டால் யாராவது திருடுவர்களா? மனிதர்களும் விலங்குகள் தான். ஆனால் எந்த  விலங்குகளும் திருடுவது கிடையாது. 



மனிதன் மட்டும் எல்லாவற்றையும் திருடி கொண்டு தானும் விலங்கு தான் என்பதை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். திருடுங்கள் நல்லதை.......

கருத்துகள்