ஏபிடிவிலியர்ஸ் திரும்ப வரமாட்டாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.....

 தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சூறாவளி பேட்ஸ்மேன் டிவிலியர்ஸ்.இவர் அணியில் இருந்து ஓய்வு பெறகிறேன் என்று அறிவித்து அணியில் இருந்து  விடை பெற்றார்அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் இவர்.தற்போது இவர் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியில் ஆடி வருகிறார்.




இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடர் நடை பெற உள்ளது. தென் ஆப்பிரிக்க அணியும் இன்னும் ஒருமுறை கூட டி20 கோப்பையை கூட கைபற்றவில்லை எனும் சோகம்  தொடர்ந்து வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் டிவிலியர்சிடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. 







மீண்டும் தேசிய அணியில் இணைந்து விளையாடுமாறு ரசிகர்களிடமிருந்து ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.இதற்கு டிவிலியர்ஸிடம் இருந்து எந்த  ஒரு அதிகாரபூர்வமான தகவலும் வெளி ஆக வில்லை.ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஏ பி டிவிலியர்ஸை மீண்டும் அணணியில் சேர்க்க முடியாது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டது.இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து எதிர்காலத்தில் சிறந்த ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.தென் ஆப்ரிக்க கிரிக்கெட்  வாரியம் இவ்வாறு தெரிவித்ததால் ரசிகர்கள் அனைவரும் கவலையில் உள்ளனர்.

கருத்துகள்