இந்தியாவில் கொரோனா தொற்று 2வது அலை வேகமெடுத்து உள்ளது.இப்போது மியூகோர்மைகோஸிஸ் எனும் பூஞ்சையால் கருப்பு பூஞ்சை தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கத்தி போய் வாள் வந்த கதை போல புதிய நோய் தொற்று வேகமாக பரவுகிறது. இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.இந்த தொற்றை கட்டு படுத்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா தொற்றை சமாளிக்க முடியாமல் உள்ள நிலையில் இப்போது கருப்பு பூஞ்சை தொற்று பெரும் சவாலக உள்ளது. இது தொடர்பாக சுகாதார துறை செயலாளர் லவ் அகர்வால் மாநில யூனியன் பிரதேச அரசுக்கு கடிதம் அனுப்பினார்.
அதில், புதிய பூஞ்சை தொற்று கொரோனா நோயாளிகளிடமிருந்தும் ஸடீராய்டு சிகிச்சை நோயாளிடம் இருந்து இந்த தொற்று காணப்படுகிறது. இதனால் உயிரிழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மத்திய அரசு பரிசோதனை சிகிச்சை ஆகியவற்றை கட்டாயமாக்கி உள்ளது. அரசுடன் பொது மக்களும் ஒத்துழைப்பு தருமாறு பணித்துள்ளது.
கருத்துகள்