10 வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு இப்படி ஒரு சலுகையா?

10 வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் தனக்கு விருப்பப்பட்ட பாட பிரிவை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.மதிப்பெண் அடிப்படையில் பாட பிரிவுகளை கொடுத்து வந்த நிலையில்,தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி அடைந்ததால் மாணவர்கள் தனக்கு விருப்பப்பட்ட பாட பிரிவை எடுத்துக் கொள்ளலாம்.இந்த சூழலில், +1 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் 3-ம் வாரத்தில் அப்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், வகுப்புகள் தொடங்க்கப்பட உள்ளன.

இது தொடர்பாக நேற்று முன் தினம் தமிழக பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில், தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைப் பாடப்பிரிவுகளில் ஏற்கனவே மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படும் எண்ணிக்கைக்கு உட்பட்டு மாணவர் சேர விரும்பும் பாடப்பிரிவுகளை மாணவர்களுக்கு ஒதுக்க உத்தரவிட்டுள்ளது. 




அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல், மாணவர் சேர்க்கை கோரும் நிலையில், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக மாணவர் சேர்க்கையை நடத்திடவும் உத்தரவிட்டுள்ளது.


மேலும், மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்த பிரிவுக்கு கிடைக்கப் பெறுகிறதோ, அச்சூழலில், அதற்கென விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப்பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களில் இருந்து 50 வினாக்கள் குறிப்பிட்ட பள்ளி ஆசிரியர்களால் தேர்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டிருந்தது.

கருத்துகள்