கல்வி என்பது ஒரு வேலையை மட்டும் பெறுவதற்காகவா?
கல்வி: கல்வி என்பது வெறும் பணம் ஈட்டுவதற்கான விசயமா? இன்றைய சூழலில் பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்பாக மட்டுமே கல்வி காணப்படுகிறது. கல்லூரியில் ஒரு பிரிவை தேர்ந்தெடுப்பது கூட நல்ல வேலை வாய்ப்பிருக்குமா? அந்த வேலை நல்ல சம்பளத்தை அளிக்குமா? எதிர்காலத்தில் அந்த துறையில் முன்னேற்றம் இருக்குமா? என்ற கோணத்தில் தான் பாடப்பிரிவுகள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இன்னும் ஒரு முக்கியமான ஒரு கதை உள்ளது. 12ம் வகுப்பு முடித்து விட்டால் அடுத்தப் படியாக கல்லூரி சென்றே ஆக வேண்டும் என்ற முறை இருந்து வருகிறது. இதனால் பல மாணவர்கள் ஏதாவது ஒரு கல்லூரியில் ஏதாவது ஒரு பாடப் பிரிவை தேர்ந்தெடுத்து கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள். இங்கே கல்லூரி செல்வதையோ படிப்பதையோ குறை கூறவில்லை. மாறாக கல்வி என்பது மனிதனுக்குள்ளே ஒரு தேடலை ஏற்படுத்த வேண்டும். பழைய கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு புதிய பாதைகளை நோக்கிய நகர்வுகளை கல்வி அளிக்க வேண்டும். மதிப்பெண்களைக் காட்டிலும், தனிமனித ஒழுக்கம், சூழலியல் பற்றிய விழிப்புணர்வு, உளவியல், கட்டாய உடல் உழைப்பு இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டு...