இடுகைகள்

எதை செய்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள்.

படம்
 எதை செய்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள். நீங்கள் வாழ்வில் எதை அதிகமாக செய்கிறீர்களோ அதனை பொறுத்தே உங்களுக்கு நடக்கக் கூடிய விசயங்களாகட்டும், உங்கள் வாழ்க்கை ஆகட்டும்.  ஆகவே எந்த ஒரு விஷயம் குறித்தும் அலட்சியமாக இருக்காதீர்கள். சும்மா ஒரு முறை முயற்சி செய்து பார்க்க போகிறோம் என்பது போலவே தோன்றும். உதாரணமாக கொஞ்ச நேரம் போன் பார்த்து விட்டு வைத்து விடலாம் என்று தோன்றும் ஆனால் அது குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்தை எடுத்துக் கொள்ளும்.  எனவே அன்றாட வாழ்க்கையில் நாம் என்ன செய்கிறோம் என்பதில் கூடுதல் கவனத்துடன் இருப்பது சிறப்பான ஒன்றாக அமையும்.

நீங்கள் மேம்பட விரும்பினால் வாழ்க்கை உங்களை முதலில் சுக்கு நூறாக உடைக்கும்

படம்
 நீங்கள் மேம்பட விரும்பினால் முதலில் வாழ்க்கை உங்களை சுக்கு நூறாக உடைக்கும். பல நேரங்களில் நாம் பலவிதமான பிரச்சினைகளில் இருந்தோ தோல்விகளில் இருந்தோ நாம் வெளி வந்திருப்போம். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையில் இந்தப் பிரச்சினைகள் ஓயாவே ஓயாது. உதாரணமாக 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எடுத்துக் கொள்வோம். நமது ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் என எல்லோரும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நமக்கு சொல்லி இருப்பார்கள். "இந்த 10ஆம் வகுப்புத் தேர்வை மட்டும் நல்ல படியாக எழுதி முடித்து விடுப்பா அப்பறம் நல்ல ஊர் சுற்றலாம் என்று". அப்பறம் 12ஆம் வகுப்பு, கல்லூரி என்று நீண்டுக் கொண்டே போய் கொண்டிருக்கும். ஆனால் அடுத்தடுத்து பிரச்னைகள் வந்து கொண்டே தான் இருக்கும். அது தீரவே தீராது. நாம் வாழ்க்கையில் முன்னேறி செல்ல செல்ல புதிய அறிவு தேவைபடும். அதனால் தான் அந்த அறிவிற்காகவும், அனுபவத்திற்காகவும் வாழ்க்கை நமக்கு பிரச்சினைகளை வழங்குகிறது.  நாம் கொஞ்சம் சிரத்தையுடன் அந்த பிரச்சினைகளை கையாள வேண்டும். வெற்றியோ,தோல்வியோ அதை துணிவுடன் எதிர் கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தின் நியதியே அது தான்.

தொடர்பயிற்சி அனைத்தையும் வெல்லும். விடாது தொடர்ந்து அடிக்கும் அலையே பெரும்பாறையை கரைக்கும்.

படம்
 பயிற்சி, பயிற்சி , பயிற்சி  நாம் நமது வாழ்க்கையில் நமக்கென்று சில கனவுகளையும், இலக்குகளையும் வைத்துக் கொள்கிறோம். நம்முடைய கனவுகளுக்காக எந்த அளவு உழைக்க வேண்டும் என்பதனை நாம் அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. பல நேரங்களில் நாம் தொடர்ந்து உழைப்பதனை தவறவிடுகிறோம். முதலில் நம் மனதினை நாம் பழக்க வேண்டும். நம்முடைய மனதினை பண்படுத்த வேண்டும் , ஏனென்றால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று மனம் அவ்வப்போது நம்முடைய கனத்தை திசை திருப்பி விடுகிறது. எனவே நம்முடைய மனதினை தொடர்ந்து பயிற்று வித்து பண்படுத்த வேண்டும். கடலில் ஏற்படும் அலையானது எவ்வாறு தொடர்ந்து வந்து கரையில் இருக்கும் பாறையின் மோதி பாறையைக் கரைப்பது போன்று தொடர்ந்து நாம் நம்முடைய மனதினை பயிற்று வித்து பண்படுத்த வேண்டும். உறுதியான மனதில் இருந்தே உறுதியான எண்ணங்களும் உறுதியான முடிவுகளும் பிறக்கும். எல்லாவற்றிற்கும் முதன்மையானது மனம் தான்  தொடர் பயிற்சியின் மூலமே இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இதனால் ஒழிய தொடர்ந்து போராடவும், சகிப்பு தன்மையுடன் இருக்கவும் முடியும்.

குணநலன்: வெற்றிக்கு இணையான விசயங்களை நமக்கு அளிக்கக்கூடிய பண்பு

படம்
 குணநலன்: வாழ்க்கையில் பெரிதாக வெற்றி அடைந்தால் மட்டுமே அனைவரும் நம்மை மதிப்பர் என்ற கருத்து நம் வாழ்க்கையில் மேலோங்கி உள்ளது. ஆனால் உண்மையில் அவை எல்லாம் பலன் அளிக்கக்கூடிய ஒன்றா? வாழ்க்கையின் இறுதியில் அவற்றால் நிம்மதி ஏற்படுமா? என்று ஆராய்ந்தால் எல்லை என்ற பதிலே கிடைக்கும்.  அதற்காக எதையுமே முயற்சிக்காமல் ஒரு சோம்பேறித்தனமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று குறிப்பிடவில்லை. பெரும்பாலும் வெற்றியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிற நம்முடைய பயணத்தில் உண்மைத் தன்மையின் அளவு குறைந்துக் கொண்டே வருகிறது. அப்பொழுது வெற்றி எப்படி இருக்க வேண்டுமெனில், யாருடைய மனதையும் புண்படுத்தாமல் , நேர்மையான முறையில் ஒரு வெற்றி அமையுமெனில் அதுவே சிறந்ததாக இருக்க முடியும். கருணை , இரக்கம், அன்பு, பரிவு இதனை விட மிகுந்த மனிதனை அழகாகக் கூடிய விசயங்கள் இவ்வுலகில் இல்லை. உங்கள் துறையை ஆழமாக காதலியுங்கள். இந்த வெற்றித் தோல்விக்கு அப்பாற்பட்டு உழையுங்கள். வெற்றி செயற்கையானது. அன்பு இயற்கையிலே உள்ளது.

தோல்விகளை குறித்து கவலைப்பட வேண்டாம் - ஹர்ஷா போக்லே

படம்
 தோல்விகளை குறித்துக் கவலை கொள்ள வேண்டாம் - ஹர்ஷா போக்லே கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் சிறந்த வர்ணனையாளர்களில் ஒருவர் ஹர்ஷா போக்லே. தற்போது அவர் பேசியுள்ள வீடியோ ஒன்று வலை தளங்களில் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறீர்களா? அதை குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கூறுகிறார். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் ராகுல் டிராவிட் 604 இன்னிங்ஸ் இந்திய அணிக்காக பேட்டிங் செய்து இருக்கிறார். அதில் 410 இன்னிங்ஸ் 50 ரன்களுக்கும்  குறைவாக ஆடியுள்ளார். மீதமுள்ள ஆட்டங்களில் மட்டுமே அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.  ரோஜர் பெடரர், மைக்கேல் ஜோர்டன் போன்ற சிறந்த வீரர்கள் தங்கள் ஆடிய ஆட்டங்களில் பல முறை தோல்வியையே தழுவி உள்ளனர். அவர்கள் வெற்றிப் பெற்றதை விட அவர்கள் அடைந்த தோல்விகளே அதிகம் தொடர்ந்து போராடி அவர்கள் சில கோப்பைகளையும் பட்டங்களையும் வென்றிருக்கிறார்கள்  எனவே ரிசல்ட்களை குறித்து கவலைக் கொள்ளாமல் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருங்கள் அது எந்த துறையாக இருக்கட்டும். உங்கள் துறையோடு இணைந்து வாழ்ந்து வாருங்கள். பிறகு எல்ல...

சிந்தனைகள், எண்ணங்கள்:- வாழ்க்கையில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றி பார்ப்போம்

படம்
 எண்ணங்கள்  சிந்தனைகள் : தொடர்ந்து நாம் சிந்திக்க கூடிய சிந்தனைகளும் எண்ணங்களும் தான் நம் வாழ்க்கையினை கட்டமைக்கின்றன. நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் அடித்தளமாக அமைவதும் இதுவே. பரிணாம வளர்ச்சியின் படி ஒரு கதை ஒன்றைப் பார்ப்போம்.  ஒட்டக சிவிங்கிகளைப் பற்றியது இது. பண்டைய காலத்தில் ஒட்டக சிவிங்கிகளின் கழுத்து மிகப் பெரியது ஒன்றும் கிடையாது. குதிரைகளை போலவே அவற்றிற்கும் கழுத்துப் பகுதி சாதாரணமாகவே இருந்தது. இந்த ஒட்டக சிவிங்கிகள் புற்களையும், இலை தழைகளையும், உண்டு வாழ்ந்து வந்தன. நாளடைவில் தரையில் இருக்கும் புற்களின் அளவுக் குறைந்து போக, மரங்களின் கிளைகளில் உள்ள இலைகளை சாப்பிட்டு வந்தன. நாட்கள் செல்ல செல்ல மரங்களில் உயரமான கிளைகளில் மட்டுமே இலைகள் இருந்தன. இதனால் இலைகளை எட்டி பிடித்து உண்ணுவதற்கு அவைகளுக்கு சிரமமாக இருந்தது.தொடர்ந்து எட்டி எட்டி பிடித்து உண்டுக் கொண்டு இருந்தன.  தொடர்ந்து எட்டி எட்டி சாப்பிட்ட வண்ணம் இருந்தாலும் , வேறு வழியில்லை கழுத்தை உயர்த்தி தழைகளை சாப்பிட்டாக வேண்டிய எண்ண உந்துதலும் காலப் போக்கில் இந்த மிகப் பெரிய கழுத்து உருவாவதற்கு காரணமாகி விட்டன....

ஆழ்ந்து கவனிக்கும் கலை பகுதி -2

படம்
 நாம் முந்தைய பதிவில் பார்த்ததை சற்று நினைவு கூறுவோம்.  எண்ணங்கள் மனதை ஆக்கிரமிப்பு செய்து இருந்தால் நம்மால் கவனிக்க இயலாது.  நம் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு சம்பவம் நமக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். நம் மனம் அதையே நினைத்துக் கொண்டு அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கும் பொழுது நம்முடைய சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் அதன் மீதே இருக்கும். மனம் வெறுமையாக இருக்கும் போதோ அல்லது அமைதியாக இருக்கும் பொழுது மட்டுமே நம்மால் கவனிக்க இயலும். இது என் வாழ்வின் சொந்த அனுபவம். நான் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் எனக்கு என் சக தோழியின் மீது ஈர்ப்பு இருந்தது. நான் அவளிடம் எப்போதும் பேசிக் கொண்டு ஊர் சுற்றிக் கொண்டு இருப்பேன். தேர்வு நேரங்களில் புத்தகங்களை திறந்து வைத்துக் கொண்டு அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டே இருப்பேன். என்னால் படிக்க இயலாது. தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைந்து தமிழ், ஆங்கிலம், தவிர மற்ற அனைத்துப் பாடங்களிலும் தோல்வி தான். அவளைப் பற்றி நினைப்பது சுகமாக இருக்கும். ஆனந்தமாக இருக்கும். அவளைப் பற்றி நினைக்கையில் சிரிப்பு வரும். 24...