இடுகைகள்

ஆழ்ந்து கவனிக்கும் கலை பகுதி -2

படம்
 நாம் முந்தைய பதிவில் பார்த்ததை சற்று நினைவு கூறுவோம்.  எண்ணங்கள் மனதை ஆக்கிரமிப்பு செய்து இருந்தால் நம்மால் கவனிக்க இயலாது.  நம் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு சம்பவம் நமக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். நம் மனம் அதையே நினைத்துக் கொண்டு அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கும் பொழுது நம்முடைய சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் அதன் மீதே இருக்கும். மனம் வெறுமையாக இருக்கும் போதோ அல்லது அமைதியாக இருக்கும் பொழுது மட்டுமே நம்மால் கவனிக்க இயலும். இது என் வாழ்வின் சொந்த அனுபவம். நான் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் எனக்கு என் சக தோழியின் மீது ஈர்ப்பு இருந்தது. நான் அவளிடம் எப்போதும் பேசிக் கொண்டு ஊர் சுற்றிக் கொண்டு இருப்பேன். தேர்வு நேரங்களில் புத்தகங்களை திறந்து வைத்துக் கொண்டு அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டே இருப்பேன். என்னால் படிக்க இயலாது. தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைந்து தமிழ், ஆங்கிலம், தவிர மற்ற அனைத்துப் பாடங்களிலும் தோல்வி தான். அவளைப் பற்றி நினைப்பது சுகமாக இருக்கும். ஆனந்தமாக இருக்கும். அவளைப் பற்றி நினைக்கையில் சிரிப்பு வரும். 24...

ஆழ்ந்து கவனிக்கும் கலை

படம்
கவனித்தல்:- கவனித்தல் என்பது ஒரு தனிச் சிறப்புடையது. நாம் எல்லோருமே பள்ளி கல்லூரிக்குச் சென்று இருப்போம். வகுப்புகளில் அமர்ந்து பாடங்களை கேட்டு இருப்போம். அவ்வாறு கேட்கையில் நம் கவனம் சிதறுவதனை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நாம் முழுவதுமாக அமர்ந்து இருப்பது வகுப்பறையில், ஆனால் நம் கண் முன்னே நமது வகுப்பாசிரியர் பாடம் நடத்தி கொண்டிருப்பார்.  அவரையெல்லாம் கடந்து நம் மனம் எங்கோ ஒரு உலகில் மிதந்து கொண்டிருக்கும். நம் படிப்பில் மட்டுமல்லாது, இயல்பு வாழ்க்கையிலும் இது நடந்து கொண்டு தான் இருக்கும்.ஒரு வேலையை செய்து கொண்டிருப்போம் ஆனால் நம் மனம் வேறு எதையோ பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கும். ஏன் ? இதெல்லாம் நடக்கிறது? ஏன் நம் மனம் எப்பொழுதும் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது? இதனை எப்பொழுதாவது சிந்தித்து பார்த்து இருக்கிறீர்களா? காரணம்: மனம் எப்பொழுதும் சுகவாசியாகவே இருக்க விரும்புகிறது. பிடிக்காத ஒரு வேலையையோ அல்லது ஏதோ ஒரு விசயத்தையிலோ நம் ஈடுபடும் பொழுது நம் மனம் அதனை ஏற்க மறுக்கிறது. மனது எப்பொழுதும் குதுகளமாகவே இருக்க விரும்புகிறது. ஆட்டம் போடவே அது எப்பொழுதும் விரும்புகிறது. இதுவே...

நேரமும் ஆற்றலும்

படம்
 நேரம்:- நேரம் என்பது மனித வாழ்வில் மதிப்பிட முடியாதது. எவன் தன் வாழ்வில் நேரத்தை மிக சரியான முறையில் செலவிடுகிறானோ அவனே வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைகிறான். இதன் பொருள் 24 மணி நேரமும் உழைப்பதும் அல்ல. ஓய்வு என்ற பெயரில் நேரத்தைக் கடத்துவதும் அல்ல. மாறாக வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து அனுபவங்களை கற்றுக் கொண்டு மீண்டு வாழ்க்கையின் இயல்பிற்கு திரும்புவதாகும். இதற்கு மிகப் பெரிய ஒரு மனோபாவம் தேவைப் படுகிறது. தவறு நிகழ்ந்து விட்டால் எதனால் நிகழ்ந்தது என்று ஆராய்ந்து நம் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அதனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். முழு மனதுடன் ஏற்றுக் கொண்டால் ஒழிய நாம் கசப்பான விசயங்களை கடக்க முடியும். நம் நேரத்தையும் நாம் பேணி காக்க முடியும். இப்போது ஒரு உதாரணத்தை பார்ப்போம். நீங்கள் ஒரு அரசு ஊழியராக வேண்டும் என்று போட்டித் தேர்வுக்கு படித்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கொள்வோம். நீங்கள் ஒரு பேருந்தில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் தவறுதலாக ஒருவரை இடித்து விடுகிறீர்கள். உடனே அவர் உங்கள் மோசமான வார்த்தைகளில் சண்டைக்கு வருகிறார் என்றால் நீங்கள் அமைதி காக்க வ...

மனம் ஒரு மகா சக்தி. பேராற்றலின் மையமும் அதுவே....

படம்
பொதுவாகவே மனதினை ஒருமுகப் படுத்தி ஒரு வேலையை செய்தால் அந்த வேலை சிறப்பாக வரும் என்று பலர் சொல்லி கேள்வி பட்டிருப்போம். ஆம். மனிதனின் ஆற்றல் மையம் அதுவே.  நாம் என்ன தகவல் கொடுக்கிறோமோ அதனை பொறுத்தே நமக்கான சிந்தனைகள் வெளிப்படுகிறது. இப்பொழுது நீங்கள் ஒரு மாணவராக இருந்தால் இப்படி வைத்து கொள்வோம், உங்களுக்கு தேர்வு உள்ளது, நீங்கள் படிக்காமல்  ஒரு வெப் தொடர் ஒன்றை பார்த்து கொண்டிருக்கிறீர்கள். சிறிது நேரம் படிக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். நீங்கள் தேர்வு அறையில் தேர்வு எழுதக் கொண்டிருக்கும் போது நீங்கள் படித்த விசயங்களை விட அந்த வெப் தொடரின் காட்சிகளும், டயலுக்கும் தான் அதிகமாக உங்கள் நினைவில் வந்து கொண்டுருக்கும். ஆகையால் உங்கள் மனதிற்கு என்ன மாதிரியான தகவல்களை நீங்கள் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். 

என்னவாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதுவாக பரிணமிக்க ஆரம்பியுங்கள்

படம்
உங்கள் வாழ்க்கையில் எந்த நிலையை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதுவாக பரிணமிக்க தொடங்குங்கள். ஒரு சாதாரண பட்டுப் புழு எவ்வாறு பட்டாம் பூச்சியாக மாறுகிறது என்றால் தன்னை அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்ல அது தயாராகிறது. அது தன்னை சுற்றி ஒரு கூடு ஒன்றை கட்டிக் கொள்கிறது. அந்த கூட்டிற்க்குள் தன்னை வருத்திக் கொண்டு சில காலம் அதனுள்ளே இருக்கிறது. பிறகு அது பட்டாம் பூசியாக உருவெடுக்கிறது. இதே நிலைபாடு தான் நமக்கும். நீங்கள் உண்மையாகவே ஒன்றை அடைய விரும்பினால் அதுவாக வாழ ஆரம்பித்து விடுங்கள்.....

எந்த அளவிற்கு ஒன்றிணைய போகிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு ரிசல்ட் கிடைக்கும்

படம்
வெற்றி பெறுவது என்பது திட்டமிட்டு கடினமாக உழைத்தால் போதுமானது. ஆனால் அதையும் தாண்டி உங்களுக்கு வேற ஏதோ ஒன்று வேண்டுமானால் அதற்கு உங்கள் ஆன்மாவை விலையாக கொடுக்க வேண்டும். சமைப்பது என்பது வழக்கமானது தான். அதில் கொஞ்சம் சுவையை சேர்ப்பது தான் சிக்கலான விசயம். ஒரு இரவு உணவுக்கே இவ்வளவு தயாரிப்பு இருக்கிறது என்றால் நீங்கள் நினைத்ததை அடைய இவ்வளவு விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்பதனை மட்டும் நினைத்து பாருங்கள். உங்களின் துறையுடன் வளர்வது என்பது இயல்பான ஒன்று. உங்கள் துறையை வளர்தெடுப்பது என்பது ஒன்று. ஒரு துறையால் நீங்கள் வளர்ந்தீர்கள் என்பது ஒரு புறம் . ஒரு துறை உங்களால் வளர்ந்தது என்பது ஒரு புறம். நீங்கள் எதனை தேர்ந்தெடுக்க போகிறீர்கள்? நீங்கள் எவ்வளவு பெரிய இலக்கினை உங்களுக்கு நிர்ணயிக்க போகிறீர்கள். இதனால் தான் விவேகானந்தர் கூறுகிறார் " உயர்ந்த இலட்சியங்கள் மற்றும் சிந்தனைகளை கொண்டு உங்கள் உள்ளத்தினை நிரப்பிடுங்கள் என்று. இப்போது ஒரு 25 கிலோ எடையை தூக்குவதற்கு தயாராகிறீர்கள் என்றால் உங்களுடைய வலிமை எப்படி இருக்கும் . 50 கிலோ எடையை தூக்குவதற்கு தயாராகிறீர்கள் என்றால் உங்க...

நீங்கள் செய்கின்ற செயல் அடுத்தவர் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வின் தரத்தை உயர்த்த வேண்டும்

படம்
மனிதர்களுக்கு என்று எப்பொழுதும் தனிப்பட்ட கனவுகள் இருந்து கொண்டே தான் இருக்கும். கனவுகள் இல்லாத மனிதர்களை காண்பது மிகவும் கடினம். படிக்க வேண்டும் , வீடு கட்ட வேண்டும் , லடாக்கிற்க்கு செல்ல வேண்டும் கடைசியாக பொருளாதார ரீதியாக நல்ல  நிலைமையில் இருக்க வேண்டும் என்றாவது மனிதர்கள் ஏதாவது கனவுகளை தூக்கி சுமந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.  இருளில் இருந்து நீங்கி வாழ்வின் வெளிச்சமான பகுதிக்கு தங்களை நகர்த்தி கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம்.  உங்களின் வாழ்வியல் அடுத்தவர் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை வாழ்வில் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்று விட்டது என்றால் நீங்கள் வெற்றி வெற்றி பெற்ற வாழ்வியலை அடைந்து விட்டீர்கள் என்று பொருள். நீங்கள் இப்பொழுது ஆவியாக இந்த பதிவினை படித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் இந்த பதிவினை படித்து முடித்தவுடன் உயிர் பெற்று இரண்டாம் முறையாக வாழ போகுறீர்கள் என்றும் வைத்துக் கொள்வோம். அந்த இரண்டாவது வாய்ப்பினை எவ்வாறு வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனை தொடங்குங்கள்.