நீங்கள் செய்கின்ற செயல் அடுத்தவர் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வின் தரத்தை உயர்த்த வேண்டும்
மனிதர்களுக்கு என்று எப்பொழுதும் தனிப்பட்ட கனவுகள் இருந்து கொண்டே தான் இருக்கும். கனவுகள் இல்லாத மனிதர்களை காண்பது மிகவும் கடினம். படிக்க வேண்டும் , வீடு கட்ட வேண்டும் , லடாக்கிற்க்கு செல்ல வேண்டும் கடைசியாக பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என்றாவது மனிதர்கள் ஏதாவது கனவுகளை தூக்கி சுமந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.
இருளில் இருந்து நீங்கி வாழ்வின் வெளிச்சமான பகுதிக்கு தங்களை நகர்த்தி கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம்.
உங்களின் வாழ்வியல் அடுத்தவர் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை வாழ்வில் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்று விட்டது என்றால் நீங்கள் வெற்றி வெற்றி பெற்ற வாழ்வியலை அடைந்து விட்டீர்கள் என்று பொருள். நீங்கள் இப்பொழுது ஆவியாக இந்த பதிவினை படித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் இந்த பதிவினை படித்து முடித்தவுடன் உயிர் பெற்று இரண்டாம் முறையாக வாழ போகுறீர்கள் என்றும் வைத்துக் கொள்வோம். அந்த இரண்டாவது வாய்ப்பினை எவ்வாறு வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனை தொடங்குங்கள்.
கருத்துகள்