ஆழ்ந்து கவனிக்கும் கலை
கவனித்தல்:- கவனித்தல் என்பது ஒரு தனிச் சிறப்புடையது. நாம் எல்லோருமே பள்ளி கல்லூரிக்குச் சென்று இருப்போம். வகுப்புகளில் அமர்ந்து பாடங்களை கேட்டு இருப்போம். அவ்வாறு கேட்கையில் நம் கவனம் சிதறுவதனை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நாம் முழுவதுமாக அமர்ந்து இருப்பது வகுப்பறையில், ஆனால் நம் கண் முன்னே நமது வகுப்பாசிரியர் பாடம் நடத்தி கொண்டிருப்பார். அவரையெல்லாம் கடந்து நம் மனம் எங்கோ ஒரு உலகில் மிதந்து கொண்டிருக்கும். நம் படிப்பில் மட்டுமல்லாது, இயல்பு வாழ்க்கையிலும் இது நடந்து கொண்டு தான் இருக்கும்.ஒரு வேலையை செய்து கொண்டிருப்போம் ஆனால் நம் மனம் வேறு எதையோ பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கும். ஏன் ? இதெல்லாம் நடக்கிறது? ஏன் நம் மனம் எப்பொழுதும் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது? இதனை எப்பொழுதாவது சிந்தித்து பார்த்து இருக்கிறீர்களா? காரணம்: மனம் எப்பொழுதும் சுகவாசியாகவே இருக்க விரும்புகிறது. பிடிக்காத ஒரு வேலையையோ அல்லது ஏதோ ஒரு விசயத்தையிலோ நம் ஈடுபடும் பொழுது நம் மனம் அதனை ஏற்க மறுக்கிறது. மனது எப்பொழுதும் குதுகளமாகவே இருக்க விரும்புகிறது. ஆட்டம் போடவே அது எப்பொழுதும் விரும்புகிறது. இதுவே...