உங்களை எப்பொழுதும் தடுப்பதற்கு ஏதோ ஒன்று இருந்து கொண்டே தான் இருக்கும். கேள்வி என்னவெனில் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?

ஒரு வேலையை செய்வதற்கு ஏதோ இடையூறுகள் வந்து கொண்டே இருக்கிறதா? அல்லது உடலும் மனமும் ஒத்துழைக்க மறுக்கிறதா? கண்டிப்பாக இந்த வார்த்தைகள் உங்களுக்கு தான்.


முதலில் சில எதார்த்தமான விசயங்களை புரிந்து கொள்வோம்.
நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதில் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து தான் தீரும். அப்படி தான் இந்த பிரபஞ்சம் கட்டமைக்க பட்டுள்ளது. உங்களிடம் இருந்தோ அல்லது வெளிப்புறத்தில் இருந்தோ பிரச்சனைகள் எழலாம். 


நாம் நமக்கு தேவையான விசயங்களை அடைய வேண்டும் என்றால் பிரச்சினைகளை எல்லாம் கடந்து தான் அடைய முடியும்.


எப்பொழுதும் ஏதோ ஒன்று தடுத்து கொண்டே இருக்கும். அது தான் அந்த வேலையை நாம் செய்ய போவதற்கு கொடுக்க போகும் விலை. நீங்கள் நன்றாக யோசித்து பாருங்கள் நீங்கள் எதை எல்லாம் தொடங்க வேண்டும் என்று நினைதீர்க்களோ அதன் கூடவே ஏதாவது பிரச்சினை இருந்து கொண்டே தான் இருக்க போகிறது.


அது எப்பொழுதுமே தீராத ஒன்று.அதனை கடந்து தான் நீங்கள் அந்த வேலையை முடித்தாக வேண்டும். இல்லையென்றால் உங்களால் எப்பொழுதும் அந்த வேலையை செய்ய முடியாது. இப்போதும் கூட உங்களுக்கென்று ஏதோ ஒரு சவால் உங்களிடத்தில் இருக்கிறது அதனை போய் தொடங்க ஆரம்பியுங்கள்.

கருத்துகள்