இடுகைகள்

நீங்கள் செய்கின்ற செயல் அடுத்தவர் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வின் தரத்தை உயர்த்த வேண்டும்

படம்
மனிதர்களுக்கு என்று எப்பொழுதும் தனிப்பட்ட கனவுகள் இருந்து கொண்டே தான் இருக்கும். கனவுகள் இல்லாத மனிதர்களை காண்பது மிகவும் கடினம். படிக்க வேண்டும் , வீடு கட்ட வேண்டும் , லடாக்கிற்க்கு செல்ல வேண்டும் கடைசியாக பொருளாதார ரீதியாக நல்ல  நிலைமையில் இருக்க வேண்டும் என்றாவது மனிதர்கள் ஏதாவது கனவுகளை தூக்கி சுமந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.  இருளில் இருந்து நீங்கி வாழ்வின் வெளிச்சமான பகுதிக்கு தங்களை நகர்த்தி கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம்.  உங்களின் வாழ்வியல் அடுத்தவர் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை வாழ்வில் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்று விட்டது என்றால் நீங்கள் வெற்றி வெற்றி பெற்ற வாழ்வியலை அடைந்து விட்டீர்கள் என்று பொருள். நீங்கள் இப்பொழுது ஆவியாக இந்த பதிவினை படித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் இந்த பதிவினை படித்து முடித்தவுடன் உயிர் பெற்று இரண்டாம் முறையாக வாழ போகுறீர்கள் என்றும் வைத்துக் கொள்வோம். அந்த இரண்டாவது வாய்ப்பினை எவ்வாறு வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனை தொடங்குங்கள்.

உங்களை எப்பொழுதும் தடுப்பதற்கு ஏதோ ஒன்று இருந்து கொண்டே தான் இருக்கும். கேள்வி என்னவெனில் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?

படம்
ஒரு வேலையை செய்வதற்கு ஏதோ இடையூறுகள் வந்து கொண்டே இருக்கிறதா? அல்லது உடலும் மனமும் ஒத்துழைக்க மறுக்கிறதா? கண்டிப்பாக இந்த வார்த்தைகள் உங்களுக்கு தான். முதலில் சில எதார்த்தமான விசயங்களை புரிந்து கொள்வோம். நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதில் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து தான் தீரும். அப்படி தான் இந்த பிரபஞ்சம் கட்டமைக்க பட்டுள்ளது. உங்களிடம் இருந்தோ அல்லது வெளிப்புறத்தில் இருந்தோ பிரச்சனைகள் எழலாம்.  நாம் நமக்கு தேவையான விசயங்களை அடைய வேண்டும் என்றால் பிரச்சினைகளை எல்லாம் கடந்து தான் அடைய முடியும். எப்பொழுதும் ஏதோ ஒன்று தடுத்து கொண்டே இருக்கும். அது தான் அந்த வேலையை நாம் செய்ய போவதற்கு கொடுக்க போகும் விலை. நீங்கள் நன்றாக யோசித்து பாருங்கள் நீங்கள் எதை எல்லாம் தொடங்க வேண்டும் என்று நினைதீர்க்களோ அதன் கூடவே ஏதாவது பிரச்சினை இருந்து கொண்டே தான் இருக்க போகிறது. அது எப்பொழுதுமே தீராத ஒன்று.அதனை கடந்து தான் நீங்கள் அந்த வேலையை முடித்தாக வேண்டும். இல்லையென்றால் உங்களால் எப்பொழுதும் அந்த வேலையை செய்ய முடியாது. இப்போதும் கூட உங்களுக்கென்று ஏதோ ஒரு சவால் உங்களிடத்தில் இருக்கிறது அத...

மனதின் அறிவுரைகள் வலிமையானதா? இதயத்தின் அறிவுரைகள் வலிமையானதா?

படம்
பொதுவாகவே ஒரு கூற்று ஒன்று உள்ளது அதாவது " வலிமையானது மட்டுமே வாழும் தகுதியுடையது என்று. எந்த மாதிரியான வாழும் முறைகளை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை பொறுத்தே நாம் வாழ்வு அமைகிறது.  அதன் படி பார்த்தால் மூளையின் வழியை கடைபிடித்தால் சிறப்பாக இருக்க முடியுமா?  அல்லது இதயத்தின் வழியை பின்பற்றினால் செழுமையாக இருக்க முடியுமா? ஏதோ ஒரு கடினமான கட்டத்தில் எந்த மாதிரியான வழியை தேர்ந்தெடுக்க போகிறோம் என்பதில் மூளையும் இதயமும் பெரும் பங்கு வகிக்கிறது. சரி இப்பொழுது மூளையைப் பின்பற்றினால் என்ன நன்மையும் என்ன இடைபாடுகளும் இருக்கும் என்பதனை காண்போம். மூளையின் விசயங்கள்:- பொதுவாக உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தான் வாழ வேண்டும் என்கின்ற பேராவல் இருக்க தான் செய்கிறது. நாம் எந்த இடத்திலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில், உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் மூளை கவனமாக இருக்கிறது. மூளை கணக்கீடுகள் செய்கிறது. யாராவது பணம் கேட்டால் நமக்கு போதுமான பணம் இருக்கிறதா? என்பதனை ஆராய்கிறது இவர்களுக்கு கொடுத்தால் திருப்பிக் கொடுத்து விடுவார்களா? என்ற சிந்தனையையும் கொடுக்கிறது.  பிற ம...

இலக்குகளை தீர்மானித்தால் மட்டும் போதாது. எவ்வாறு அதனை அடைய வேண்டும் என்று அதற்கான பாதைகளைத் தேட வேண்டும்.

படம்
வாழ்க்கையில் எல்லோருக்குமே இலக்குகள், கனவு, இலட்சியம் என்று இருக்க தான் செய்கிறது. 1% மக்களே தங்களின் இடங்களை அடைகின்றனர். எதனால் அவர்கள் மட்டும் அந்த இலக்கினை அடைகிறார்கள் என்று பார்த்தோமானால்.  1. வெற்றியாளர்கள் தனிமையில் இருக்க கற்றுக் கொள்கிறார்கள். இதன் மூலம் பிறர் தங்களுடைய நேரத்தை தின்று விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். 2. வெற்றியாளர்கள் தங்களுடைய விசயங்களை பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள் இதனால் தங்களுடைய இலக்கின் மீது மட்டுமே கவனம் செலுத்தி அதை வசப்படுத்துகிறார்கள். எதை சிந்திகிறீர்களோ அதையே ஈர்கிறீர்கள். நீங்கள் சினிமாவை அதிகம் விரும்புவீர்கள் என்றால் சினிமா சம்பந்தப் பட்ட விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிப்பீர்கள். மற்ற விசயங்கள் சார்ந்த செய்தி வந்தாலும் அதை புறக் கணித்து விடுவீர்கள்.   3.சகிப்புத் தன்மை  கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் உங்களுக்கு யார்மீதேனும்  அளவு கடந்த அன்பு இருந்தால் அவர்கள் செய்யும் குற்றங்களை சகித்துக் கொள்வீர்கள். ஏனென்றால் உங்களுக்கு அவர்கள் தேவை. அது போல உங்களின் கனவை அடைய சகிப்புத் தன்மையுடன் இருக்க பழக...

டோனிக்கு சரியாக பேட்டிங் செய்யத் தெரியாது. ஆனாலும் எவ்வாறு இந்திய அணியை வழி நடத்தினார்.

படம்
நேற்று தனது 43வது பிறந்த நாளைக் கொண்டாடினார். சென்னை அணியின் கேப்டனாக இருந்து ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆன இவர் கீப்பிங் செய்வதில் மிகவும் திறமையானவர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஒரு பேட்ஸ்மேன் ஆக இவரை பற்றி பார்த்தோமேயானால்...... டெஸ்டில் 4876 ரன்களும், ஒருநாள் போட்டியில் 10773 ரன்களும்.T20யில்  1617 ரன்கள் எடுத்து இருக்கிறார். இதனால் என்ன என்று தானே கேட்கிறீர்கள். டோனிக்கு ஒரு சரியான ஷாட் கூட ஆடத் தெரியாது. ஆனால் உண்மையாகவே மூன்று உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்தது எல்லாம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. விராட் கோலி,தோனியை விட சிறந்த பேட்ஸ்மேன் தான் ஆனால் அவரால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. எவ்வாறு இவர் மூன்று உலகக் கோப்பையை வென்றார் என்றால்  நிதானம் தான்.  அமைதியாக இருந்து நேரத்திற்கு தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் தன்மை நிறையவே இவரிடம் உண்டு. பொறுமை, நிதானம் இந்த இரண்டும் தான் இவர் மூன்று உலகக் கோப்பைகளை வெல்வதற்கு காரணமாக அமைந்தது. எந்த நேரத்தில் என்ன செய்வது யாருக்கு எப்போது பந்தைக் கொடுக்க வேண்டும், இன்...

புதியதாக ஒன்றைத் தொடங்க போகிறீர்களா? கண்டிப்பாக இதனை தெரிந்துக் கொள்ளுங்கள்

படம்
வாழ்க்கையில் நாமும் ஏதாவது ஒன்றை தொடங்கி சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?  இந்த பதிவு உங்களுக்கு தான்.  நமக்கு சித்தப்பா, பெரியப்பா,மாமா என்று சொந்தக் காரர்கள் இருப்பார்கள்."அவர்கள் கூறுவார்கள் நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் அடிக்காத கூத்தே கிடையாது என்று. எல்லாம் அந்த அந்த வயதில் செய்ய வேண்டிய சேட்டைகள் தான் என்று கூறுவார்கள். ஆனால் அவர்களுடைய காலம் வேறு, நம்முடைய காலம் வேறு. அந்த காலத்தில் படித்து இருந்தால் மட்டும் போதும் தேடி வந்து அரசு பணியை கொடுத்து விடுவார்கள். அந்த காலத்தில் படித்தவர்கள் குறைவு. போட்டி சூழல்கள் குறைவு. எனவே அவர்களுடைய வாழ்க்கை முறையில் சிறு சிறு கடினமான விசயங்கள் இருந்தாலும் இந்த காலத்தை ஒப்பிடுகையில் அதெல்லாம் வெகு சாதரணமாக போய் விட்டது.  இப்போது எந்த துறை எடுத்தாலும் ஆயிரக் கணக்கான போட்டியாளர்கள். இந்த நிலையில் ஒரு துறையில் வெற்றிப் பெறுவது என்பது மிகக் கடினம். ஆனால் நீங்கள் தொடர்ந்து உங்கள் துறையில் உழைக்க தயார் எனில் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். எதையுமே நேரம் தான்  தீர்மானிக்கிறது. நீங்கள் எதற்கு அதிக நேரத்தை  ...

உங்கள் வாழ்விற்கான கருத்துக்களையும் கொள்கைகளையும் நீங்களே உருவாக்குங்கள்

படம்
வாழ்க்கையை வாழ்வதற்கு காற்றும் நீரும் எந்த அளவிற்கு முக்கியமோ அதுபோல "கருத்துக்களும் அதனை பொது வெளியில் பேசவும், செயல்படுத்துவதற்குமான சுதந்திரமும் அவ்வளவு முக்கியம். நீங்கள் வெளிப்படையாக உங்களுடைய கருத்தினை யாரிடமும் சொல்லாமல் இருக்கலாம் அல்லது அப்படி பட்ட ஒன்று எனக்குள் இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால் எல்லா மனிதர்களின் உள்ளேயும் அவர்களுக்கான கருத்தியல்களும் சிந்தனை முறைகளும் நிரம்பி கிடக்கின்றன. உங்களை நீங்களே கேளுங்கள்:  பொதுவாக இந்த மாதிரியான விசயங்களை நீங்கள் எதிர் கொண்டு இருப்பீர்கள். என்ன நீ மட்டும் தனியாக இருக்கிறாய். என் எங்களோடு ஒற்று போக மறுக்கிறாய் என்ற கேள்விகளை கூட சந்தித்துஇருப்பீர்கள். உங்களுடய கருத்துக்களே உங்களை கூட்டதினைடயே இருந்து பிரிக்கிறது. இந்த கருத்தினை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் கூட போகலாம். உங்கள் வாழ்க்கையின் தேவைகளே உங்களுக்கான கொள்கைகளை உருவாக்குகிறது. அந்த கூட்டத்தின் தேவை ஒன்றாக இருக்கலாம், உங்களின் தேவை ஒன்றாக இருக்கலாம். இதன் காரணமாகவே உங்களால் அந்த பெருவாரியான மக்களுடன் இணைய முடியாமல் போகிறது.  ஒருவேளை உங்களுக்கு நான் தவறான பாதையில் பய...