இலக்குகளை தீர்மானித்தால் மட்டும் போதாது. எவ்வாறு அதனை அடைய வேண்டும் என்று அதற்கான பாதைகளைத் தேட வேண்டும்.
வாழ்க்கையில் எல்லோருக்குமே இலக்குகள், கனவு, இலட்சியம் என்று இருக்க தான் செய்கிறது. 1% மக்களே தங்களின் இடங்களை அடைகின்றனர். எதனால் அவர்கள் மட்டும் அந்த இலக்கினை அடைகிறார்கள் என்று பார்த்தோமானால்.
1. வெற்றியாளர்கள் தனிமையில் இருக்க கற்றுக் கொள்கிறார்கள்.
இதன் மூலம் பிறர் தங்களுடைய நேரத்தை தின்று விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
2. வெற்றியாளர்கள் தங்களுடைய விசயங்களை பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள்
இதனால் தங்களுடைய இலக்கின் மீது மட்டுமே கவனம் செலுத்தி அதை வசப்படுத்துகிறார்கள். எதை சிந்திகிறீர்களோ அதையே ஈர்கிறீர்கள். நீங்கள் சினிமாவை அதிகம் விரும்புவீர்கள் என்றால் சினிமா சம்பந்தப் பட்ட விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிப்பீர்கள். மற்ற விசயங்கள் சார்ந்த செய்தி வந்தாலும் அதை புறக் கணித்து விடுவீர்கள்.
3.சகிப்புத் தன்மை
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் உங்களுக்கு யார்மீதேனும் அளவு கடந்த அன்பு இருந்தால் அவர்கள் செய்யும் குற்றங்களை சகித்துக் கொள்வீர்கள். ஏனென்றால் உங்களுக்கு அவர்கள் தேவை. அது போல உங்களின் கனவை அடைய சகிப்புத் தன்மையுடன் இருக்க பழகிக் கொள்ளுங்கள் அதுவும் உங்களுக்கு முக்கியமானது தான்.
4. மக்களைப் பயன்படுத்துங்கள்.
இது கொஞ்சம் விநோதமாக தெரியும் யாரையும் சுயநல நோக்கத்துடன் பயன்படுத்த கூடாது என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் உண்மை என்று பார்த்தால் எல்லோருக்கும் ஒவ்வொரு தேவை இருக்கிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் மனிதருக்கும் ஒருத் தேவை இருக்கிறது உங்களுடைய தேவையை பூர்த்தி செய்து கொண்டு அவருடைய தேவையையும் பூர்த்தி செய்யுங்கள். இது ஒரு பண்ட மாற்று முறை போன்றது. இதில் எந்த தவறும் இல்லை.
5. உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் பயன்படுத்துங்கள்.
டாடா, அம்பானி, அதானி, எலன் மாஸ்க். இவர்கள் எல்லோருமே பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ளனர் ஆனாலும் தொடர்ந்து உழைத்து கொண்டே இருக்கிறார்கள். உங்களது துறையில் நீங்கள் அடைய வேண்டிய துரத்தை அடைந்தால் மட்டும் போதும் என்று நினைத்து விடாதீர்கள். உங்கள் இறுதி நாள் வரை உங்கள் துறைக்காக பங்களித்து கொண்டே இருங்கள்.
6.உங்களின் இடத்தை நிரப்ப மறந்து விடாதீர்கள்.
உங்கள் துறையில் உழைத்து ஓய்வு பெறும் நிலை வரும் பொழுது நீங்கள் என்ன செய்தீர்களோ அதை செய்ய இன்னோரு ஒரு ஆற்றல் உள்ள மனிதரை உருவாக்க தவறி விடாதீர்கள். ஒரு நல்ல தலைவன் மக்களை நல் வழியில் மட்டும் கொண்டு செல்பவன் மட்டுமல்லன். தனக்கு பிறகு அந்த இடதிற்க்கு இன்னோரு தலைவனை உருவக்குபவனே சிறந்த தலைவன்.
கருத்துகள்