டோனிக்கு சரியாக பேட்டிங் செய்யத் தெரியாது. ஆனாலும் எவ்வாறு இந்திய அணியை வழி நடத்தினார்.

நேற்று தனது 43வது பிறந்த நாளைக் கொண்டாடினார். சென்னை அணியின் கேப்டனாக இருந்து ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆன இவர் கீப்பிங் செய்வதில் மிகவும் திறமையானவர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஒரு பேட்ஸ்மேன் ஆக இவரை பற்றி பார்த்தோமேயானால்......



டெஸ்டில் 4876 ரன்களும், ஒருநாள் போட்டியில் 10773 ரன்களும்.T20யில் 
1617 ரன்கள் எடுத்து இருக்கிறார்.


இதனால் என்ன என்று தானே கேட்கிறீர்கள். டோனிக்கு ஒரு சரியான ஷாட் கூட ஆடத் தெரியாது. ஆனால் உண்மையாகவே மூன்று உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்தது எல்லாம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.




விராட் கோலி,தோனியை விட சிறந்த பேட்ஸ்மேன் தான் ஆனால் அவரால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. எவ்வாறு இவர் மூன்று உலகக் கோப்பையை வென்றார் என்றால் 



நிதானம் தான்.  அமைதியாக இருந்து நேரத்திற்கு தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் தன்மை நிறையவே இவரிடம் உண்டு. பொறுமை, நிதானம் இந்த இரண்டும் தான் இவர் மூன்று உலகக் கோப்பைகளை வெல்வதற்கு காரணமாக அமைந்தது. எந்த நேரத்தில் என்ன செய்வது யாருக்கு எப்போது பந்தைக் கொடுக்க வேண்டும், இன்னும் சொல்லப் போனால் பவுலர்கள் அடி வாங்கும் போது சச்சின், கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், என்று இவர்களையும் இவர் பயன் படுத்தி உள்ளார். 




இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் புதிய முற்சிகளை பயன்படுத்த அவர் தவறியதில்லை. 2011 உலகக் கோப்பையில் சச்சின் 2 ஓவர்களும் கோஹ்லி ஒரு ஓவரும் வீசி இருப்பார்கள். ஆட்டதின் போக்கு எவ்வாறு சென்றுக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து எவ்வாறு செயல் பட வேண்டும் என்பது தான் இவர் உலகக் கோப்பைகளை கையில் எந்துவதற்க்கு முக்கிய காரணம்.







தோல்விகள் வரும் பொழுது கேப்டன் என்ற பொறுப்பில் இருந்து விலகாமல் பொறுமையாக நிதானம் காத்து தன் முறை வரும் பொழுது அதனை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். இதனை நாம் கண்டிப்பாக தெரிந்துக் கொள்ளவேண்டும் எத்துணை திறமையாக இருந்தாலும் நமக்கு என்று காலம் வரும் பொழுது தான் மிளிர முடியும். அதற்காக திறமை குறைத்து கூறவில்லை. நேரம் வரும் வரையில் காத்திருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

கருத்துகள்