வாழ்க்கையை வாழ்வதற்கு காற்றும் நீரும் எந்த அளவிற்கு முக்கியமோ அதுபோல "கருத்துக்களும் அதனை பொது வெளியில் பேசவும், செயல்படுத்துவதற்குமான சுதந்திரமும் அவ்வளவு முக்கியம்.
நீங்கள் வெளிப்படையாக உங்களுடைய கருத்தினை யாரிடமும் சொல்லாமல் இருக்கலாம் அல்லது அப்படி பட்ட ஒன்று எனக்குள் இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால் எல்லா மனிதர்களின் உள்ளேயும் அவர்களுக்கான கருத்தியல்களும் சிந்தனை முறைகளும் நிரம்பி கிடக்கின்றன.
உங்களை நீங்களே கேளுங்கள்:
பொதுவாக இந்த மாதிரியான விசயங்களை நீங்கள் எதிர் கொண்டு இருப்பீர்கள். என்ன நீ மட்டும் தனியாக இருக்கிறாய். என் எங்களோடு ஒற்று போக மறுக்கிறாய் என்ற கேள்விகளை கூட சந்தித்துஇருப்பீர்கள். உங்களுடய கருத்துக்களே உங்களை கூட்டதினைடயே இருந்து பிரிக்கிறது.
இந்த கருத்தினை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் கூட போகலாம். உங்கள் வாழ்க்கையின் தேவைகளே உங்களுக்கான கொள்கைகளை உருவாக்குகிறது. அந்த கூட்டத்தின் தேவை ஒன்றாக இருக்கலாம், உங்களின் தேவை ஒன்றாக இருக்கலாம். இதன் காரணமாகவே உங்களால் அந்த பெருவாரியான மக்களுடன் இணைய முடியாமல் போகிறது.
ஒருவேளை உங்களுக்கு நான் தவறான பாதையில் பயணிக்கிறேன் என்ற கேள்வி எழும் போதெல்லாம் உங்களை நீங்களே கேட்டு கொள்ளுங்கள். நான் சரியான பாதையில் தான் பயணிக்கிறேனா? என்று உங்களை நீங்களே கேட்டு கொள்ளுங்கள்.
புத்தரை எதிருங்கள்:-
"ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் கூறுகிறார்." இதன் காரணமாகவே அவர் எல்லா விதமான ஆசைகளையும் உதிர்த்து விட்டு தெய்வ நிலையை அடைந்தார்.
உங்களுக்கு புத்தரின் நிலைபாடோடு ஒன்றிப் போக விருப்பம் இருந்தால் தாராளமாக புத்தரை பின்பற்றலாம். அதே சமயம் உங்களுக்கு என்று ஆசைகள் , கனவுகள், இலக்குகள் இருந்து அதை அடைய வேண்டும் என்ற இடையுறாத வேட்கை உங்களுக்கு இருக்குமானால் கண்டிப்பாக புத்தரின் கருத்தை ஏற்றுக் கொள்ளதீர்கள்.
ஏனென்றால் உங்களுடைய கருத்தினை நீங்கள் நேசிக்க தொடங்கி இருக்கிறீர்கள். எப்படி புத்தரை உங்களுக்கு ஏற்றுக் கொள்ள உரிமை இருக்கிறதோ அதே போல புத்தரை மறுக்கவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. கண்டிப்பாக ஆசை, கனவுகளை துரத்தும் போது துயரங்களும் சங்கடமான தருணங்களும் நிகழும். அமைதியான வாழ்வு வேண்டுமெனில் ஆசைகளை விட்டு விடுங்கள் இல்லை கனவுகள் தான் முக்கியமெனில் அமைதியான வாழ்வினை எதிர்பார்க்காதீர்கள்.
கருத்தினை வளர்த்து எடுங்கள்:-
உங்களுக்கென்று ஒரு கருத்து கொள்கைகளை நீங்கள் கொண்டிருக்கும் பட்சத்தில் அந்த கருத்தினை நீங்கள் காலத்திற்கு. ஏற்றவாறு வளர்த்து எடுக்க வேண்டும். காலத்திற்கு ஏற்றவாறு கருத்து கொள்கைகளை மேம்படுத்த வேண்டும் இல்லை என்றால் உங்கள் கருத்து நயபுடைந்து விடும்.ஏன் கருத்துக் கொள்கைகள் என்று மாரடித்துக் கொண்டு இருக்கு இருக்கிறீர்கள் என்ற எண்ணம் இங்கு எழவே செய்யும். கருத்துக்களும் கொள்கைகளும் தான் இங்கு உங்களுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறது. இதனால் தான் எண்ணம் போல் வாழ்க்கை நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். எப்படி வாழ்வினை குறித்து நீங்கள் கருத்துக்களை கொண்டு இருக்கிறீர்களோ அது போல அந்த கருத்தினை காலத்திற்கு ஏற்றார் போல் மேம்படுத்துங்கள்.
தலைவர்கள் எப்பொழுதும் தங்களுடைய கருத்துக்களை விட்டுக் கொடுப்பதில்லை:-
பெரிய பெரிய தலைவர்கள் எப்பொழுதும் தங்களுடைய கருத்துக்களை ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை.
வரலாற்றின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான நெப்போலியன் கூட இதற்கு சான்று.
ஒருமுறை நெப்போலியன் யுத்த களத்திற்க்கு புறப்படத் தயாராக இருந்தான். ஆனால் அவருடைய படைத் தளபதி இன்னும் வராமல் இருந்தார். நேரம் வேற போய்க் கொண்டே இருந்தது. தாமதம் ஆகிக் கொண்டிருக்க தளபதியும் வந்து சேர்ந்து விட்டார். ஏன் இவ்வளவு தாமதம் என்று கேட்டார் நெப்போலியன். நான் சரியான நேரத்திற்கு தான் வந்திருக்கிறேன் என்று கூறினார் தளபதி நெப்போலியன் அவருடைய கடிகாரத்தைக் காட்டி விட்டு நீங்கள் அரை மணி நேரம் தாமதமாக தான் வந்து இருக்கிறீர்கள் என்று கூறினார். தளபதியார் உடனே அவருடைய கடிகாரத்தைப் பார்த்து விட்டு மன்னித்து விடுங்கள் என்னுடைய கடிகாரம் சரியாக ஓடவில்லை என்று கூறினார். அதற்கு நெப்போலியன் ஒன்று கடிகாரத்தை மாற்றுங்கள் இல்லை என்றால் நான் உங்களை மாற்றி விடுவேன் என்று கூறினார். பல போர்களில் அந்த தளபதியாரின் வியூகம் நெப்போலியனுக்கு வெற்றிகளை பெற்று தந்தது இருக்கிறது.இருந்த போதிலும் நேரத்தை விரயமக்கியது தளபதியாக இருந்த போதிலும் அவர் கண்டிக்க தவறியதில்லை. இது போல் தன் கருத்துக்களை விட்டு கொடுக்காத தலைவர்கள் இது போன்று சரித்திரத்தில் இடம் பொருவதற்கு காரணம் அவர்களுக்கு என்று கொள்கைகளை வகுத்துக் கொண்டு அதை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தது தான்.
கருத்துகள்