மனதின் அறிவுரைகள் வலிமையானதா? இதயத்தின் அறிவுரைகள் வலிமையானதா?

பொதுவாகவே ஒரு கூற்று ஒன்று உள்ளது அதாவது " வலிமையானது மட்டுமே வாழும் தகுதியுடையது என்று. எந்த மாதிரியான வாழும் முறைகளை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை பொறுத்தே நாம் வாழ்வு அமைகிறது.  அதன் படி பார்த்தால் மூளையின் வழியை கடைபிடித்தால் சிறப்பாக இருக்க முடியுமா?  அல்லது இதயத்தின் வழியை பின்பற்றினால் செழுமையாக இருக்க முடியுமா? ஏதோ ஒரு கடினமான கட்டத்தில் எந்த மாதிரியான வழியை தேர்ந்தெடுக்க போகிறோம் என்பதில் மூளையும் இதயமும் பெரும் பங்கு வகிக்கிறது.
சரி இப்பொழுது மூளையைப் பின்பற்றினால் என்ன நன்மையும் என்ன இடைபாடுகளும் இருக்கும் என்பதனை காண்போம்.

மூளையின் விசயங்கள்:-

பொதுவாக உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தான் வாழ வேண்டும் என்கின்ற பேராவல் இருக்க தான் செய்கிறது. நாம் எந்த இடத்திலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில், உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் மூளை கவனமாக இருக்கிறது. மூளை கணக்கீடுகள் செய்கிறது. யாராவது பணம் கேட்டால் நமக்கு போதுமான பணம் இருக்கிறதா? என்பதனை ஆராய்கிறது இவர்களுக்கு கொடுத்தால் திருப்பிக் கொடுத்து விடுவார்களா? என்ற சிந்தனையையும் கொடுக்கிறது. 



பிற மனிதர்கள் மீது மூளை கருணைக் காட்டுகிறது என்று ஆராய்ந்தால் அது கொஞ்சம் குறைவு தான். ஆனால் நம்மை அடுத்த அடுத்த இடத்திற்கு நகர்த்துவது, பொருளாதார ரீதியாக நிலையாக வைத்து கொள்ள வேண்டும் என்பதனை அறிவுறுத்திக் கொண்டே இருப்பதும் மூளை தான். எல்லா மனிதர்களையும் நம்பி விடாமல் அவர்களை எடைப் போட்டு
 அவர்களுக்கு சரியான இடத்தை நமது வாழ்வில் கொடுக்க வேண்டும் என்று சமிக்கை கொடுப்பதும் மூளை தான்.



இதயத்தின் வழிகளைப் பார்ப்போம்:-


இந்த தலைப்பை பற்றி கூறத் தேவையே இல்லை. இதயம் கனிவு நிறைந்தது. மக்களை அரவணைக்க தெரிந்தது. அன்பானது, அமைதியானது என்று உங்களுக்கு தெரியும். பெரும்பாலான மக்கள் இதயத்தின் வழியே நடக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனை வைத்து பல ஏமாற்று வழிகள் நடக்கின்றன. 



இதயம் சொல்வதனை கேள் ஏனென்றால் என்ன நடந்தாலும் அதனை தாங்கும் சக்தி அதற்கு மட்டுமே உண்டு என்று விவேகானந்தர் கூறியுள்ளார். ஆராய்ந்து பார்த்தால் இதயத்தின் வழியாக வாழ்வது மிகவும் கடினம் தான். ஆனால் அதுவே சில கூடுதல் சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.  


உங்களிடம் எதுவும் இது குறித்து சிறப்பான கருத்துக்கள் எதுவும் இருந்தால் கண்டிப்பாக அதனை பதிவிடவும்

கருத்துகள்