புதியதாக ஒன்றைத் தொடங்க போகிறீர்களா? கண்டிப்பாக இதனை தெரிந்துக் கொள்ளுங்கள்

வாழ்க்கையில் நாமும் ஏதாவது ஒன்றை தொடங்கி சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? 
இந்த பதிவு உங்களுக்கு தான். 


நமக்கு சித்தப்பா, பெரியப்பா,மாமா என்று சொந்தக் காரர்கள் இருப்பார்கள்."அவர்கள் கூறுவார்கள் நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் அடிக்காத கூத்தே கிடையாது என்று. எல்லாம் அந்த அந்த வயதில் செய்ய வேண்டிய சேட்டைகள் தான் என்று கூறுவார்கள். ஆனால் அவர்களுடைய காலம் வேறு, நம்முடைய காலம் வேறு.



அந்த காலத்தில் படித்து இருந்தால் மட்டும் போதும் தேடி வந்து அரசு பணியை கொடுத்து விடுவார்கள். அந்த காலத்தில் படித்தவர்கள் குறைவு. போட்டி சூழல்கள் குறைவு. எனவே அவர்களுடைய வாழ்க்கை முறையில் சிறு சிறு கடினமான விசயங்கள் இருந்தாலும் இந்த காலத்தை ஒப்பிடுகையில் அதெல்லாம் வெகு சாதரணமாக போய் விட்டது. 



இப்போது எந்த துறை எடுத்தாலும் ஆயிரக் கணக்கான போட்டியாளர்கள். இந்த நிலையில் ஒரு துறையில் வெற்றிப் பெறுவது என்பது மிகக் கடினம். ஆனால்




நீங்கள் தொடர்ந்து உங்கள் துறையில் உழைக்க தயார் எனில் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். எதையுமே நேரம் தான்  தீர்மானிக்கிறது. நீங்கள் எதற்கு அதிக நேரத்தை    செலவிடகிறிர்களோ அதில் சிறந்து விளங்குவீர்கள்.
எனவே நேரத்தை எவ்வாறு பயன்படுத்த போகிறீர்கள் என்பதை தெளிவாக சிந்தித்து செயல் படுங்கள்.





அண்மையில் ஒரு அரசுத் தேர்வு ஒன்று நடந்தது.அதில் மொத்த பணியிடங்கள் 7000 மட்டுமே. ஆனால் அதற்கு விண்ணபித்தவர்கள் 700000 பேர். ஆனால் இதில் நிறைய பேர் என்ன மன நிலையில் எழுதி இருப்பார்கள் என்றால் சும்மா எழுதி தான் பார்ப்போமே என்று தான் எழுதி இருப்பார்கள். இவர்களால் என்றுமே எதையுமே எட்ட முடியாது.  எவன் ஒருவன் தன் துறையில் தன் ஆன்மாவை கரைக்கிறனோ அவன் மட்டுமே தன் துறையில் வெற்றி பெறுகிறான்.

கருத்துகள்