இடுகைகள்

புதியதாக ஒன்றைத் தொடங்க போகிறீர்களா? கண்டிப்பாக இதனை தெரிந்துக் கொள்ளுங்கள்

படம்
வாழ்க்கையில் நாமும் ஏதாவது ஒன்றை தொடங்கி சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?  இந்த பதிவு உங்களுக்கு தான்.  நமக்கு சித்தப்பா, பெரியப்பா,மாமா என்று சொந்தக் காரர்கள் இருப்பார்கள்."அவர்கள் கூறுவார்கள் நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் அடிக்காத கூத்தே கிடையாது என்று. எல்லாம் அந்த அந்த வயதில் செய்ய வேண்டிய சேட்டைகள் தான் என்று கூறுவார்கள். ஆனால் அவர்களுடைய காலம் வேறு, நம்முடைய காலம் வேறு. அந்த காலத்தில் படித்து இருந்தால் மட்டும் போதும் தேடி வந்து அரசு பணியை கொடுத்து விடுவார்கள். அந்த காலத்தில் படித்தவர்கள் குறைவு. போட்டி சூழல்கள் குறைவு. எனவே அவர்களுடைய வாழ்க்கை முறையில் சிறு சிறு கடினமான விசயங்கள் இருந்தாலும் இந்த காலத்தை ஒப்பிடுகையில் அதெல்லாம் வெகு சாதரணமாக போய் விட்டது.  இப்போது எந்த துறை எடுத்தாலும் ஆயிரக் கணக்கான போட்டியாளர்கள். இந்த நிலையில் ஒரு துறையில் வெற்றிப் பெறுவது என்பது மிகக் கடினம். ஆனால் நீங்கள் தொடர்ந்து உங்கள் துறையில் உழைக்க தயார் எனில் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். எதையுமே நேரம் தான்  தீர்மானிக்கிறது. நீங்கள் எதற்கு அதிக நேரத்தை  ...

உங்கள் வாழ்விற்கான கருத்துக்களையும் கொள்கைகளையும் நீங்களே உருவாக்குங்கள்

படம்
வாழ்க்கையை வாழ்வதற்கு காற்றும் நீரும் எந்த அளவிற்கு முக்கியமோ அதுபோல "கருத்துக்களும் அதனை பொது வெளியில் பேசவும், செயல்படுத்துவதற்குமான சுதந்திரமும் அவ்வளவு முக்கியம். நீங்கள் வெளிப்படையாக உங்களுடைய கருத்தினை யாரிடமும் சொல்லாமல் இருக்கலாம் அல்லது அப்படி பட்ட ஒன்று எனக்குள் இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால் எல்லா மனிதர்களின் உள்ளேயும் அவர்களுக்கான கருத்தியல்களும் சிந்தனை முறைகளும் நிரம்பி கிடக்கின்றன. உங்களை நீங்களே கேளுங்கள்:  பொதுவாக இந்த மாதிரியான விசயங்களை நீங்கள் எதிர் கொண்டு இருப்பீர்கள். என்ன நீ மட்டும் தனியாக இருக்கிறாய். என் எங்களோடு ஒற்று போக மறுக்கிறாய் என்ற கேள்விகளை கூட சந்தித்துஇருப்பீர்கள். உங்களுடய கருத்துக்களே உங்களை கூட்டதினைடயே இருந்து பிரிக்கிறது. இந்த கருத்தினை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் கூட போகலாம். உங்கள் வாழ்க்கையின் தேவைகளே உங்களுக்கான கொள்கைகளை உருவாக்குகிறது. அந்த கூட்டத்தின் தேவை ஒன்றாக இருக்கலாம், உங்களின் தேவை ஒன்றாக இருக்கலாம். இதன் காரணமாகவே உங்களால் அந்த பெருவாரியான மக்களுடன் இணைய முடியாமல் போகிறது.  ஒருவேளை உங்களுக்கு நான் தவறான பாதையில் பய...

இந்திய அணியில் ஷபாஸ் அகமது. வாஷி சுந்தருக்கு காயம் காரணமாக மாற்று வீரராக களமிறக்க முடிவு

படம்
பெங்களுரு அணியின் வீரரும் இந்திய அணியின் வீரருமான வாஷிங்டன் சுந்தா் எதிர்கால இந்திய அணியின் தூண்களில் ஒருவராக கருதப்படுகிறாா். தற்போது நடக்கவிருந்த ஜிம்பாப்வே இந்திய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் இடம் பெற்று இருந்த வாஷிங்டன் சுந்தா் தற்போது காயம் காரணமாக விலகி இருக்கிறாா். அவருக்கு மாற்று வீரராக ஷபாஸ் அகமது களமிறக்க முடிவு செய்துள்ளனா். வாஷிங்டன் சுந்தா் சிறந்த ஆல் ரவுண்டா் அவருடைய இடத்தை ஷபாஸ் அகமது  எவ்வாறு பூா்த்தி செய்கிறாா் என்று  பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

இஸ்லாத்தை எங்களுக்கு நோ்மையாக இருக்க வேண்டும் என்றே கற்பிக்கிறது. பிரபல வீரா் கருத்து

படம்
பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வான் ஆடி வருகிறாா். அவா் அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளாா். நான் எனது இஸ்லாம் மதத்தை பெரிதும் நேசிக்கிறேன். எப்பொழுதும் நோ்மையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது. ஆகையினால் ஆடுகளத்தில் எப்பொழுதும் நோ்மையுடன் செயல்பட வேண்டும் என்றே எண்ணுகிறேன் இவ்வாறு கூறினாா். <head><script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-4729731706535973"      crossorigin="anonymous"></script </head>

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை ரத்து செய்த ஃபீஃபா

படம்
உலகமுழுவதும் உள்ள மொத்த நாடுகளின் கால்பந்து அணிகளை வழிநடத்துவது ஃபீஃபா தான். உலக கோப்பை கால்பந்து போன்ற சா்வதேச போட்டிகளை நடத்துவது ஃபீஃபா தான். தற்போது ஒரு சா்ச்சை எழந்துள்ளது. ஃபீஃபாவின் விதிமுறைகளை மீறியாதகவும், மூன்றாம் தரப்பினா் குறுக்கிட்டதாகவும் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் மீது புகாா் எழுந்துள்ளது.  இதனால் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் மீது தற்காலிக தடை விதித்துள்ளது ஃபீஃபா. அதுமட்டுமின்றி அக்டோபா் மாதம் இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்குட்பட்ட மகளிா் அணிகளுக்கு நடக்க இருந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டு தற்போது வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப் பட உள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரிடம் கண்ணத்தி்ல் அறை வாங்கினேன் மனம் திறந்த ராஸ் டெய்லா்.

படம்
நியுசிலாந்தின் நட்சத்திர வீரர் ராஸ் டெய்லா் அவரிடம் அவரது சுய சரிதைக்காக பேட்டி எடுக்கப் பட்டது அதில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டாா்.  என் இள வயதில் (21) இருந்தே ஐ.பி.எல் போட்டிகளில் ஆடி வருகிறேன். அப்பொழுது ஒருமுறை ராஜஸ்தான் அணிக்காக என்னை ஏலத்தில் எடுத்தாா்கள். அந்த சீசனில் அந்த அணிக்காக ஆடி வந்தேன் அப்பொழுது ஒருமுறை ஒரு ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் (டக் அவுட்) ஆட்டமிழந்தேன்.  அதற்காக அந்த அணியின் உரிமையாளா் என் கண்ணத்தில் அறைந்தாா். டக் அவுட் ஆவதற்கு உன்னை கோடிகளில் எடுக்க வில்லை என்று என்னிடம் கடுமையாக நடந்து கொண்டாா். அப்பொழுது அந்த சம்பவத்தை பொிதாக நான் எடுத்துக் கொள்ள வில்லை என்று அந்த கடினமான தருணத்தை பகிா்ந்துக் கொண்டாா்.

எந்த ஒரு வெளி நாட்டு டி20 தொடா்களிலும் இந்திய வீரா்கள் பங்கேற்க கூடாது. கங்குலி அவா்கள் அதிரடி

படம்
இந்தியாவில் ஐ.பி.எல் தொடா் போல தென்னாப்பிாிக்க மற்றும் அரபு நாட்டிலும் டி20 தொடா்கள் நடை பெற்று வருகிறது.  இந்திய வீரா்கள் தங்களுடைய ஓய்வுக்கு பிறகும் இந்த வெளி நாட்டு தொடா்களில் பங்கேற்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளாா். அதுமட்டுமில்லாமல் அந்த தொடாில் விளையாடும் அணிக்கு ஆதரவு தொிவிக்கவோ அல்லது ஆலோசனை வழங்கவோ கூடாது எனவும் தொிவித்துள்ளாா்.