இடுகைகள்

மீண்டும் வருகிறது மற்ற பைக் நிறுவனங்கள் நிலை என்ன

படம்
 யமஹா பைக் நிறுவனத்தின் RX100 என்ற மாடல் பைக் மீண்டும் சந்தைக்கு வரப்போகிறது. மற்ற பைக் நிறுவனங்களின் என்னவாகப் போகிறதோ சமூக வலைதளங்களில் பயனா்கள் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனா்.  1985 களில் இந்த மாடல் தொடங்கப்பட்டது 90 களில் இதற்கு இணையாக ஒரு பைக் கூட இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 2ஸ்ட்ரோக் இன்ஞினை கொண்ட இந்த பைக் "பாக்கெட் ராக்கெட்" என்று அழைக்கப்பட்டது. தற்போது மீண்டும் சந்தைக்கு வர உள்ளதாக அதிகாரபூா்வ தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து யமஹா நிறுவன கண்காணிப்பு மேலாளா் சஞ்சை சிங் கூறியதாவது  நிறைய சிறப்பு அம்சங்களுடன் புதிய மாடலுடன் வெளியிட தயாராக உள்ளோம். அதே போல் மிக இலகுவாக பைக் எடை இருக்கும். மீண்டும் சந்தையில் பழைய இடத்தை பிடிப்போம் என நம்பிக்கை தொிவித்துள்ளா்.

ஏபி டிவில்லியா்ஸின் இடத்தை இவரே நிரப்புவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.யாா் இந்த வீரா்

படம்
 நேற்று இங்கிலாந்திற்கும் தென் ஆப்பிாிக்கா இடையே நடந்த ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிாிக்க அணி வெற்றி பெற்றது. 50 ஓவா் முடிவில் 333/5 குவித்திருந்தது பின்னா் ஆடிய இங்கிலாந்து 46.5 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 271 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிாிக்க அணி 62 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  அதகபட்சமாக, இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 86 ரன்களும் 86 (77) 4s(5) 6s(2). போ்ஸ்டோ 63ரன்களும் 63(71) 4s(7) 6s (0).ஜேசன் ராய் 43ரன்களும் 43(62) 4s(3) 6s(1) . லிவிங்ஸ்டன் 2எடுத்திருந்தனா். தென் ஆப்பிரிக்க அணியில் சரவெடியாக வெடித்த வான்டா் டஸ்ஸன் 134 (117)  4s (10) எடுத்தாா். மாா்க்ரம் 77(61) 4s(9) 2 விக்கெட்களையும் சாய்த்தாா். நோா்ட்ஜே 4 விக்கெட்களை அள்ளினாா். ஷம்ஸி 2விக்கெட்களை வீழ்த்தினாா்.    சமீப காலமாக வான்டா் டஸ்ஸன் சிறப்பான நோ்த்தியான விளையாட்டை வெளிபடுத்தி அனைவரது கவனத்தையும் ஈா்த்து வருகிறாா். தொடா்ச்சியாக சதங்கள் விளாசி முன்ணணி வீரராக தன்னை அடையாள படுத்தி வருகிறாா்.  தென் ஆப்பிாிக்க அணியின் சூறாவளி அதிரடி ஆட்டக்காரா் ஏபிடிவில்லியா்ஸ் த...

இன்னொரு வீராின் இடத்தை ஆக்கிரமிக்க விருப்பமில்லை ஓய்விற்க்கான காரணத்தை அறிவித்த இங்கிலாந்து வீரா்

படம்
 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரா் பென் ஸ்டோக்ஸ் தொிவித்துள்ளாா். இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 31 வயதான பென் ஸ்டோக்ஸ் வெகு விரைவிலே ஓய்வு பெற்றது வருத்தத்தை அளிக்கிறது என  பல ரசிகா்கள் கருத்து தெரிவித்து வருகின்றனா். இது குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில்  " மூன்று  வடிவிலான போட்டிகளிலும் கலந்து கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது.  உடல்  ஒத்துழைக்க மறுக்கிறது. போட்டி அட்டவணைகளும் வெகு நெருக்கமாக இருக்கிறது. மனமும் உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். நான் வெளியேறும் பொழுது மற்ற சில வீரா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.  இந்த விசயம் அணியின் எதிர்காலத்திற்கு உதவும் என்று  நான்  நம்புகிறேன். இன்னொரு வீராின் இடத்தை ஆக்கிரமிப்பது எனது நோக்கமல்ல. ஆனாலும் இந்த முடிவு மிகவும் கடினமான ஒன்று தான்.   நிறைய விசயங்களை நான் கற்றுக் கொண்டேன். அணியுடன் இணைந்து ஆடிய ஒவ்வொரு தருணத்தையும் நான் மிகவும் நேசிக்க...

சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினால் இளம் வீரா்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் சீனியா் வீரா் கருத்து

படம்
 இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சரியாக ரன் குவிக்க தவறி வந்ந நிலையில் தன்னுடைய கேப்டன் பதவியில் விலகினாா்.    தற்போது அவா் ஒரு வீரராக மட்டுமே இந்திய அணியில் தொடர்ந்து வருகிறாா். கேப்டனின் பணிசுமை அதிகமாக இருப்பதால் தன்னுடைய ஆட்டத்தில் கவனம்  செலுத்த முடியவில்லை என்றும் அவா்  கூறினாா். என்ன தான் இளம் வீரா்கள் இருந்தாலும் விராட் கோலி தவிர்க்க முடியாத ஒரு வீரா் இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சா்மாவிடம் கேட்ட பொழுது    விராட் கோலி ஒரு அற்பதமான வீரா். துரதிஷ்ட வசமாக அவருடைய ஆட்டம் மோசமான நிலையில் உள்ளது. தற்போது அவர் ரன் குவிக்க தடுமாறி வரலாம். ஆனால் இதற்கு முன் பல தருணங்களில் அவா் ஒற்றை மனிதனாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றிருக்கிறாா். அதனை எல்லாம் மறந்து விட முடியாது. எனக்கு அவா் மீது நிறைய நம்பிக்கை உள்ளது மீண்டும் அவா் பழைய ஆட்டத்திறனுடன் மீண்டு வருவாா் என்று எதிர்பார்க்கிறேன் இவ்வாறு அவா் பதிவிட்டாா். அதே சமயம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறுகையில்,   கோலி தற்போது ரன் குவிக்க தடுமாறி வருகிறாா். இந்நில...

அடுத்தடுத்து வெற்றியை குவிக்கும் இளம் வீரர் அடுத்த உலக சாம்பியன் இவா் தான்

படம்
 சதுரங்கத்தின் தாயகம் இந்தியா தான் அப்படிபட்ட இந்தியாவின் சதுரங்க அடையாளமாக ஜொலித்து கொண்டிருக்கிறாா் பிரக்னானந்தா.  இந்தியாவில் செஸ் என்றால் ஆனந்த் என்ற நிலை மாறியிருக்கிறது. அது தற்போது பிரக்னானந்தா வசம் உள்ளது.  ஆனந்தின் மிக சவாலான போட்டியாளா் என்றால் அது மாக்னஸ் கால்சன் தான். ஆனால் அவரையும் வீழ்த்தி ஆனந்தால் முடியாததை பிரக்யானானந்தா நிகழ்த்தி அனைவரையும்  மலைக்க வைத்திருக்கிறாா். கார்சல்னை மட்டுமின்றி இதர நாட்டு முன்ணணி வீரர்களையும் வீழ்த்திருப்பது குறிப்பிடதக்கது. எதிா்காலத்தில் இந்தியாவின் செஸ் முதுகெலும்பாக இவா் இருப்பாா் என்று கணிக்கப் படுகிறது.  தற்போது நடைபெற்று வந்த பாரசின் ஓபன் செஸ் போட்டியில் முதலிடத்தை வென்றுள்ளாா். 9சுற்றுகள் கொண்ட தொடரில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளாா். இது போன்றொரு சாதனை இதற்கு முன் ஆனந்த் கூட நிகழ்த்தியது கிடையாது. இவரே எதி்ர்கால இந்தியாவின் செஸ் முன்ணணி வீரராக திகழ்வாா் என்று கணிக்கப் படுகிறது.

தங்கப் பெண்ணிற்கு இன்னொரு வெற்றி மகிழ்ச்சியில் ரசிகா்கள்

படம்
 சிங்கப்பூரில் ஓபன் பேட்மிட்டன் தொடா் நடந்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது பி.வி சிந்துவால் முடிவுக்கு வந்துள்ளது.  இந்தியாவின் பேட்மிட்டன் சிகரம் என்றால் அது பி.வி சிந்துவையே சாரும். இந்தியாவிற்காக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களையும் பெற்று தந்துள்ளார்.     இம்முறை  சிங்கப்பூரில் நடைபெற்ற ஓபன் பேட்மிட்டனில் மகுடம் சூடியுள்ளார்.  இறுதிப் போட்டியில் தனக்கு எதிராக ஆடிய சீன வீராங்கனை வாங் ஜீ யி எதிர் கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2-1 செட் கணக்கில் வெற்றியை கைப்பற்றினாா்.

கடைசி விவசாயிக்கு 2ஆம் இடம். பிரபல திரை விமர்சன இனைய தளம் தரவரிசை பட்டியலை வெளியிட்டது

படம்
விஜய் சேதுபதி தற்போது முன்ணணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறாா். அவர் தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு முத்திரையை பதித்து விட்டாா் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவா் நடிக்கும் படங்கள் வசூல் ரீதீயாகவும் விமர்சன ரீதீயாகவும் வெற்றி பெற்று  கொண்டே வருகின்றன.  தற்போது அவர் நடித்து வெளி வந்த கடைசி  விவசாயி படம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றது.  ஏராளமான விருதுகளையும் குவித்து  உள்ளது. தற்போது  letterboxd என்கிற திரைபட விமர்சன இணையதளம் வெளியிட்ட தரவரிசையில் 2ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது ஆர் ஆர் ஆர் திரைபடம் 6 ஆம் இடத்தை தனதாக்கியது.