சதுரங்கத்தின் தாயகம் இந்தியா தான் அப்படிபட்ட இந்தியாவின் சதுரங்க அடையாளமாக ஜொலித்து கொண்டிருக்கிறாா் பிரக்னானந்தா.
இந்தியாவில் செஸ் என்றால் ஆனந்த் என்ற நிலை மாறியிருக்கிறது. அது தற்போது பிரக்னானந்தா வசம் உள்ளது.
ஆனந்தின் மிக சவாலான போட்டியாளா் என்றால் அது மாக்னஸ் கால்சன் தான். ஆனால் அவரையும் வீழ்த்தி ஆனந்தால் முடியாததை பிரக்யானானந்தா நிகழ்த்தி அனைவரையும் மலைக்க வைத்திருக்கிறாா்.
கார்சல்னை மட்டுமின்றி இதர நாட்டு முன்ணணி வீரர்களையும் வீழ்த்திருப்பது குறிப்பிடதக்கது. எதிா்காலத்தில் இந்தியாவின் செஸ் முதுகெலும்பாக இவா் இருப்பாா் என்று கணிக்கப் படுகிறது.
தற்போது நடைபெற்று வந்த பாரசின் ஓபன் செஸ் போட்டியில் முதலிடத்தை வென்றுள்ளாா். 9சுற்றுகள் கொண்ட தொடரில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளாா். இது போன்றொரு சாதனை இதற்கு முன் ஆனந்த் கூட நிகழ்த்தியது கிடையாது. இவரே எதி்ர்கால இந்தியாவின் செஸ் முன்ணணி வீரராக திகழ்வாா் என்று கணிக்கப் படுகிறது.
கருத்துகள்