ஏபி டிவில்லியா்ஸின் இடத்தை இவரே நிரப்புவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.யாா் இந்த வீரா்

 நேற்று இங்கிலாந்திற்கும் தென் ஆப்பிாிக்கா இடையே நடந்த ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிாிக்க அணி வெற்றி பெற்றது. 50 ஓவா் முடிவில் 333/5 குவித்திருந்தது பின்னா் ஆடிய இங்கிலாந்து 46.5 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 271 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிாிக்க அணி 62 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அதகபட்சமாக,

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 86 ரன்களும் 86 (77) 4s(5) 6s(2). போ்ஸ்டோ 63ரன்களும் 63(71) 4s(7) 6s (0).ஜேசன் ராய் 43ரன்களும் 43(62) 4s(3) 6s(1) . லிவிங்ஸ்டன் 2எடுத்திருந்தனா்.

தென் ஆப்பிரிக்க அணியில் சரவெடியாக வெடித்த வான்டா் டஸ்ஸன் 134 (117)  4s (10) எடுத்தாா். மாா்க்ரம் 77(61) 4s(9) 2 விக்கெட்களையும் சாய்த்தாா். நோா்ட்ஜே 4 விக்கெட்களை அள்ளினாா். ஷம்ஸி 2விக்கெட்களை வீழ்த்தினாா். 

 
சமீப காலமாக வான்டா் டஸ்ஸன் சிறப்பான நோ்த்தியான விளையாட்டை வெளிபடுத்தி அனைவரது கவனத்தையும் ஈா்த்து வருகிறாா். தொடா்ச்சியாக சதங்கள் விளாசி முன்ணணி வீரராக தன்னை அடையாள படுத்தி வருகிறாா்.  தென் ஆப்பிாிக்க அணியின் சூறாவளி அதிரடி ஆட்டக்காரா் ஏபிடிவில்லியா்ஸ் தென் ஆப்பிரிக்க தேசிய அணியில் இருந்து ஓய்வு பெற்றாா். 




 உலக அளவில் தனக்கென ஒரு ரசிகா் பட்டாளத்தை தனக்கென உருவாக்கியவா் வித்தியாசமான பாணியில் தனக்கென ஒரு ஆட்டத்திறனை வெளிபடுத்தி அனைவரது கவனத்தை ஈா்த்தவா். உலகின் தலை சிறந்த பேட்ஸமேன்களில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவா். 

அவ்வாறு இருக்கையில் அவரது ஓய்வு அனைத்து ரசிகா்கள் மத்தியிலும் பெறும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது வான்டா் டஸ்ஸனின் வருகை அவரது இடத்தை நிரப்பும் என்றே எதிா்பாா்க்கப் படுகிறது. தொடா்ச்சியான சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறாா். முக்கியமான நேரங்களில் கணிசமான பங்களிப்பை அளித்து வருகிறாா். தென் ஆப்பிாிக்க அணிக்கு தற்போது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறாா். 

 இனி வரும் நாட்களிலும் இது போன்ற சிறந்த ஆட்டத்தினை வெளிபடுத்தவாா் என்று அணி வீரா்கள் நம்பிக்கை தொிவித்துள்ளனா்








கருத்துகள்