இன்னொரு வீராின் இடத்தை ஆக்கிரமிக்க விருப்பமில்லை ஓய்விற்க்கான காரணத்தை அறிவித்த இங்கிலாந்து வீரா்

 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரா் பென் ஸ்டோக்ஸ் தொிவித்துள்ளாா். இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.





31 வயதான பென் ஸ்டோக்ஸ் வெகு விரைவிலே ஓய்வு பெற்றது வருத்தத்தை அளிக்கிறது என  பல ரசிகா்கள் கருத்து தெரிவித்து வருகின்றனா். இது குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் 




" மூன்று  வடிவிலான போட்டிகளிலும் கலந்து கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது.  உடல்  ஒத்துழைக்க மறுக்கிறது. போட்டி அட்டவணைகளும் வெகு நெருக்கமாக இருக்கிறது. மனமும் உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். நான் வெளியேறும் பொழுது மற்ற சில வீரா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். 





இந்த விசயம் அணியின் எதிர்காலத்திற்கு உதவும் என்று  நான்  நம்புகிறேன். இன்னொரு வீராின் இடத்தை ஆக்கிரமிப்பது எனது நோக்கமல்ல. ஆனாலும் இந்த முடிவு மிகவும் கடினமான ஒன்று தான்.  




நிறைய விசயங்களை நான் கற்றுக் கொண்டேன். அணியுடன் இணைந்து ஆடிய ஒவ்வொரு தருணத்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன். எஞ்சியுள்ள இரு வடிவிலான ஆட்டங்களுக்கு என்னுடைய முழு ஆட்டத்திறனையும் வெளிப்படுத்துவேன்". இவ்வாறு அவா் கூறியுள்ளாா்.

கருத்துகள்