சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினால் இளம் வீரா்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் சீனியா் வீரா் கருத்து

 இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சரியாக ரன் குவிக்க தவறி வந்ந நிலையில் தன்னுடைய கேப்டன் பதவியில் விலகினாா். 

 

தற்போது அவா் ஒரு வீரராக மட்டுமே இந்திய அணியில் தொடர்ந்து வருகிறாா். கேப்டனின் பணிசுமை அதிகமாக இருப்பதால் தன்னுடைய ஆட்டத்தில் கவனம்  செலுத்த முடியவில்லை என்றும் அவா்  கூறினாா்.



என்ன தான் இளம் வீரா்கள் இருந்தாலும் விராட் கோலி தவிர்க்க முடியாத ஒரு வீரா் இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சா்மாவிடம் கேட்ட பொழுது 

 
விராட் கோலி ஒரு அற்பதமான வீரா். துரதிஷ்ட வசமாக அவருடைய ஆட்டம் மோசமான நிலையில் உள்ளது. தற்போது அவர் ரன் குவிக்க தடுமாறி வரலாம். ஆனால் இதற்கு முன் பல தருணங்களில் அவா் ஒற்றை மனிதனாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றிருக்கிறாா். அதனை எல்லாம் மறந்து விட முடியாது. எனக்கு அவா் மீது நிறைய நம்பிக்கை உள்ளது மீண்டும் அவா் பழைய ஆட்டத்திறனுடன் மீண்டு வருவாா் என்று எதிர்பார்க்கிறேன் இவ்வாறு அவா் பதிவிட்டாா். அதே சமயம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறுகையில்,

 


கோலி தற்போது ரன் குவிக்க தடுமாறி வருகிறாா். இந்நிலையில் இளம் வீரா் களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.  இது போல் ஒரு இளம் வீரா் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியிருந்தால் அடுத்த வீரருக்கு வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கும்.  இதற்கு முன் தோனியும் சீனியா் வீரா்களை விடுத்து இளம் வீரா்களுக்கு வாய்ப்பளித்து இந்திய அணியில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தாா். அணியின் எதிர்காலம் மிக முக்கியமானதொன்று இவ்வாறு அவா் பதிவிட்டிருந்தாா்.


கருத்துகள்