தங்கப் பெண்ணிற்கு இன்னொரு வெற்றி மகிழ்ச்சியில் ரசிகா்கள்

 சிங்கப்பூரில் ஓபன் பேட்மிட்டன் தொடா் நடந்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது பி.வி சிந்துவால் முடிவுக்கு வந்துள்ளது. 

இந்தியாவின் பேட்மிட்டன் சிகரம் என்றால் அது பி.வி சிந்துவையே சாரும். இந்தியாவிற்காக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களையும் பெற்று தந்துள்ளார்.  

 
இம்முறை  சிங்கப்பூரில் நடைபெற்ற ஓபன் பேட்மிட்டனில் மகுடம் சூடியுள்ளார். 

இறுதிப் போட்டியில் தனக்கு எதிராக ஆடிய சீன வீராங்கனை வாங் ஜீ யி எதிர் கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2-1 செட் கணக்கில் வெற்றியை கைப்பற்றினாா்.


கருத்துகள்