இடுகைகள்

ஏபிடிவிலியர்ஸ் திரும்ப வரமாட்டாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.....

படம்
 தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சூறாவளி பேட்ஸ்மேன் டிவிலியர்ஸ்.இவர் அணியில் இருந்து ஓய்வு பெறகிறேன் என்று அறிவித்து அணியில் இருந்து  விடை பெற்றார்அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் இவர்.தற்போது இவர் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியில் ஆடி வருகிறார். இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடர் நடை பெற உள்ளது. தென் ஆப்பிரிக்க அணியும் இன்னும் ஒருமுறை கூட டி20 கோப்பையை கூட கைபற்றவில்லை எனும் சோகம்  தொடர்ந்து வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் டிவிலியர்சிடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.  மீண்டும் தேசிய அணியில் இணைந்து விளையாடுமாறு ரசிகர்களிடமிருந்து ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.இதற்கு டிவிலியர்ஸிடம் இருந்து எந்த  ஒரு அதிகாரபூர்வமான தகவலும் வெளி ஆக வில்லை.ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஏ பி டிவிலியர்ஸை மீண்டும் அணணியில் சேர்க்க முடியாது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டது.இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து எதிர்காலத்தில் சிறந்த ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.தென் ஆப்ரிக்க கிரிக்கெட்  வாரியம் இவ்வாறு தெ...

சூரரைப் போற்று படத்திற்க்கு மூன்றாவது இடம்???

படம்
சூர்யா நடித்து பெண் இயக்குனர் சுதா கங்கோரா இயக்கத்தில் வெளியான படம் சூரரைப் போற்று.இ்ந்த படம் கடந்த வருடம் இறுதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் சிறிது உண்மையையும் நிறைய கற்பனைகளையும் கலந்து தயாரிக்கப்பட்டது.சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ்,ஊர்வசி ஆகியோர் நடித்து உள்ளனர். ஒரு சாதாரண மனிதன் அவனுடைய கனவை வென்றெடுத்தானா என்பதே கதையின் கரு. இந்நிலையில் ஐ.எம்.டி.பி  சிறந்த படங்களி்ன் பட்டியலை வெளியிட்டது.  இதில் சூர்யா நடித்த படம் தேர்வானது.  படத்தின் ரேட்டிங் 9.1/10 . அதுமட்டுமின்றி 3வது சிறந்த படமாகவும் தேர்வானது. தமிழ் சினிமா வரலாற்றில் இது மிகப் பெரிய வெற்றி. மற்ற முன்ணணி நடிகர்கள் செய்யததை நடிகர் சூர்யா செய்து காட்டியுள்ளார். சூரரைப் போற்று மூன்றாவது படமாக தேர்வானதை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உலகின் சிறந்த படங்களில் ஒன்று- தி ஷாவ்ஷாங்க் ரிடெம்சன்

படம்
இந்த படத்தை பார்ப்பதற்கு நீங்கள் மிக பொறுமையாக இருக்க வேண்டும். ஒரு காரியம் வெற்றியடைய எவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டுமோ அவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டும்.ஒரு சிறந்த படைப்பு என்று தான் சொல்ல வேண்டும்.உலகின் வலி அனைத்தும் உங்களுக்குள் கடத்தப்படும் என்று நினைக்கிறேன். படத்தினை அவ்வளவு அருமையாக செதுக்கி இருக்கிறார்கள்.படத்தின் கதை என்ன என்று பார்த்தால் அதை நான் முன்னரே சொல்லிவிட்டேன். இது ஒரு மனதை ஊக்குவிக்கும் படம் என்று கூட சொல்லலாம்.உண்மையிலேயே இது இரு சிறந்த படம் தான்.....

மீண்டு்ம் வருகிறாரா? கிரிக்கெட் வரலாற்றில் திருப்பு முனை நிகழுமா??

படம்
  தென்னப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆப்ரகாம் பெஞ்சமின் டிவில்லியர்ஸ்.வெளிநாட்டு வீரராக இருந்தாலும் இந்தியாவில் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்ற நிலையில் தற்போது கிளப் போட்டிகளில் ஆடி வருகிறார். இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடர் நடக்க உள்ளது.இதனால் மீண்டும் வந்து       தென்னாப்பிரிக்க அணியில் ஆடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் பெங்களூரு ரசிகர்கள் டிவில்லியர்ஸ் இறக்கை முளைத்து பறந்து பந்தை பிடிப்பது போன்றும் சித்தரித்து இனணய தளத்தில் பகிர்ந்து உள்ளனர்.ரசிகர்களின் ஏக்கத்தை புரிந்து கொண்டு மீண்டும் வருவாரா? அதே  சமயம் தென்னாப்பிரிக்க அணி இதுவரை ஒரு  முறை கூட உலக கோப்பை போட்டி தொடரில் ஒரு தொடரில் கூட வென்றது இல்லை.(ஒரு நாள் தொடரிலும் வென்றது இல்லை, டி20 தொடரிலும் வென்றது இல்லை) இதை எல்லாவற்றையும் மாற்றி அமைப்பார? என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

சென்னை அணியின் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்றா...?

படம்
இந்தியாவில் நடந்து கொண்டிருந்த ஐபிஎல் தொடர், கொரோனா தொற்று    காரணமாக  தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  இப்போது சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கொரோனா தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் இருக்கிறார். சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இவர், தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். சில நாட்களுக்கு முன் மீண்டும் பரிசோதனை செய்த போது  நெகடிவ்          என்று முடிவு வந்துள்ளது.இதனால் ஹசி  சென்னையில் இருந்து தோகா வழியாக விமானம் மூலம் ஆஸ்திரேலியா சென்றார். இதே போல சுமித்,கம்மின்ஸ் வர்ணனையாளர்கள் என்று 38 பேர் இந்தியாவில் இருந்து கிளம்பி மாலத்தீவு சென்று உள்ளனர்.அவர் இன்று தனி விமானம் வாயிலாக ஆஸ்திரேலியா சென்றடைகின்றனர்.மீண்டும் சிட்னியில் ஒரு ஓட்டலில் தனிமைபடுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுவர்.

பந்தை சேதப்படுத்திய சர்ச்சை மீண்டும் சூடிபிடிக்கிறது....

படம்
  தென் ஆப்ரிக்காவிற்கும் ஆஸ்திரேலியா  இடையே நடந்த டெஸ்ட்  போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்      படுத்திய சர்ச்சையில் சிக்கினர். இதில் இளம் வீரர் ஒருவர் இருப்பது தெரிய வந்துள்ளது.ஆஸ்திரேலியா அணியின் வளர்ந்து வரும் வீரர்  கேமரூன் பான்கிராப்ட் இந்த விசயம் பற்றி மனம் திறந்தள்ளார்.அப்போது ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித்ம் துனண கேப்டனாக டேவிட் வார்னரும் இருத்தனர். இதனால் ஸ்மித்திற்கு 1வருட காலமும் வார்னருக்கு 9 மாதமும் விளையாட ஐசிசி தடை விதித்தது இருந்தது.தற்போது இந்த சர்சையில் புதிய திருப்பம் வந்துள்ளது. உப்பு தாளை வைத்து பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்தது நான் தான்.இந்த விசயம் அனைவருக்கும் தெரியும் என்று கூறினார். பந்தின் தன்மையை மாற்றினால் பந்து வீசுவதற்கு பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும். அப்போது மிட்சல் மார்ஷ், நாதன் லியோன், ஹசல்வுட்,ஸ்டார்க் போன்ற முன்ணணி பவுலர்கள் இருந்து கவனிக்கதக்கது.உலக தரம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி இவ்வாறு நடந்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.  ஆனால் தண்டனை மட்டும் கேப்டனை மட்டுமே சார்ந்துள்ளது.தண்டித்தால் ஒட்ட...

காபி அருந்துவதின் நன்மைகள்......

படம்
 நீங்கள் தினமும் காபி அருந்துபவரா.....? இந்த பக்கம் உங்களுக்கு தான். உலக மக்களின் சக்தியின்  பிறப்பிடம்  காபி என்று கூடச் சொல்லலாம்.பெட்ரோலிற்கு அடுத்த படியாக அதிகமாக விற்பனை        ஆகும் பொருள் காபி.4 லட்சம் டன் காபி      கொட்டைகள்  இறக்குமதி  இந்தியாவில்    இறக்குமதி செய்யப்படுகின்றன. முதன்    முதலில் எத்தியோப்பாவில் தான் காபி      அறிமுகம் ஆனதாக உலக மக்களால்      நம்பப்படுகிறது.   எத்தியோப்பியர்கள் ஆடு மேய்ப்பவர்கள். ஆடுகள்  காபி கொட்டைகளை விரும்பி மேய்ந்தன.ஆடு மேய்பவர்கள் இதனை கவனிக்கையில்    காபி கொட்டைகளை மேயந்த ஆடுகள்  சுறுசுறுப்பாக இருப்பதை அறிந்தனர். இதன் காரணமாக எத்தியோப்பியர்கள்    தங்களும் காபியை தங்களது உணவில்  சேர்த்து கொள்ள ஆரம்பித்தனர்.   காபியில் கோபைன் என்கிற வேதிப்          பொருள் உள்ளது. இது மனிதனின் நரம்பு மண்டலத்தில் கலந்து உற்சாகமாக்கிறது. இதன் காரணமாகவே காபியை பெரிதும் விரும்ப...