நீங்கள் தினமும் காபி அருந்துபவரா.....? இந்த பக்கம் உங்களுக்கு தான். உலக மக்களின் சக்தியின் பிறப்பிடம் காபி என்று கூடச் சொல்லலாம்.பெட்ரோலிற்கு அடுத்த படியாக அதிகமாக விற்பனை ஆகும் பொருள் காபி.4 லட்சம் டன் காபி கொட்டைகள் இறக்குமதி இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. முதன் முதலில் எத்தியோப்பாவில் தான் காபி அறிமுகம் ஆனதாக உலக மக்களால் நம்பப்படுகிறது. எத்தியோப்பியர்கள் ஆடு மேய்ப்பவர்கள். ஆடுகள் காபி கொட்டைகளை விரும்பி மேய்ந்தன.ஆடு மேய்பவர்கள் இதனை கவனிக்கையில் காபி கொட்டைகளை மேயந்த ஆடுகள் சுறுசுறுப்பாக இருப்பதை அறிந்தனர். இதன் காரணமாக எத்தியோப்பியர்கள் தங்களும் காபியை தங்களது உணவில் சேர்த்து கொள்ள ஆரம்பித்தனர்.
காபியில் கோபைன் என்கிற வேதிப் பொருள் உள்ளது. இது மனிதனின் நரம்பு மண்டலத்தில் கலந்து உற்சாகமாக்கிறது. இதன் காரணமாகவே காபியை பெரிதும் விரும்புகின்றனர் மக்கள். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் காபியை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.பால் போன்ற உணவு பொருட்களை எடுத்து கொள்வது நல்லது. காபியினை எடுத்துக் கொள்வதால் இதயத்தின் துடிப்பு சீராக இருக்க உதவுகிறது.மன ரீதியாக அதிக அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு காபி ஒரு அருமருந்தாக இருக்கும்.அதிகமாக காபி அருந்துபவர்கள் மனக் கவலைகள் அனைத்தையும் உடைத்து எரிபவர்களாக இருப்பார்கள்.பலர் மத்தியில் காபி அருந்துவதால் பல உடல் நலக்கேடுகள் வரும் என்றே எண்ணப்படுகிறது. எல்லா உணவுகளை போன்றே காபியும் அளவு அதிகமானால் அனைத்து விசயமும் விசமாக மாறி விடும். எனவே காபி அருந்துவதையும் அளவோடு வைத்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு(அ) மூன்று முறை காபி எடுத்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம். ஒரு நாளைக்கு 250மில்லி கிராம் கோபைன் எடுத்துக் கொண்டால் நல்லது.காபியுடன் மாத்திரை எடுத்துக் கொள்வது நல்லது இல்லை இந்த மாதிரி மாத்திரை எடுத்து கொள்வதன் மூலம் மாத்திரையின் வீரியம் குறைந்து விடும்.
கருத்துகள்