சென்னை அணியின் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்றா...?

இந்தியாவில் நடந்து கொண்டிருந்த ஐபிஎல் தொடர், கொரோனா தொற்று    காரணமாக  தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  இப்போது சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கொரோனா தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் இருக்கிறார்.

சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இவர், தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். சில நாட்களுக்கு முன் மீண்டும் பரிசோதனை செய்த போது  நெகடிவ்          என்று முடிவு வந்துள்ளது.இதனால் ஹசி  சென்னையில் இருந்து தோகா வழியாக விமானம் மூலம் ஆஸ்திரேலியா சென்றார். இதே போல சுமித்,கம்மின்ஸ் வர்ணனையாளர்கள் என்று 38 பேர் இந்தியாவில் இருந்து கிளம்பி மாலத்தீவு சென்று உள்ளனர்.அவர் இன்று தனி விமானம் வாயிலாக ஆஸ்திரேலியா சென்றடைகின்றனர்.மீண்டும் சிட்னியில் ஒரு ஓட்டலில் தனிமைபடுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுவர்.

கருத்துகள்