இடுகைகள்

உங்க பிறந்த நாள்ல யாருமே வாழ்த்து தெரிவிக்க வில்லையா....???

படம்
 எல்லோரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது இவ்வாறு செய்து இருப்போம். காலன்டர் வங்கிய புதிதில் தீபாவளி எப்போது வருகிறது.பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் வருகிறதா.? இல்லை வேலை நாளில் வருகிறதா? என்றெல்லாம் பார்த்திருப்போம்.அடுத்து ஒரு முக்கியமான நாளை பார்ப்போம்.ஆம் நமது பிறந்த நாளை பார்ப்போம்  நமக்கு பிடித்தவரின் பிறந்த நாளை பார்ப்போம். நமது பிறந்த நாள் நெருங்க நெருங்க நமக்குள் இனம்புரியாத எதிர்பார்ப்பு தோன்றும். நமது பிறந்த நாளன்று நமக்கு படித்தமானவர்கள் வாழ்த்து தெரிவிப்பார்களா....? பரிசளிப்பார்களா..?  என்றெல்லாம் தோன்றும். ஆனால் ஒருவேளை, ஒருவேளை நமக்கு பிடித்தவர்கள் நம்முடைய பிறந்த நாளை மறந்து விட்டால் அல்லது வாழத்து தெரிவிக்க தவறி  விட்டால்.........                           அன்று மிக கடுமையான நாளாக அமைந்து விடும். ஏதோ உலக பாரங்கள் அனைத்தும் உங்கள் மீது இருப்பது போல் உணர்வீர்கள். துக்கம் தொண்டையை அடைப்பது போல் இருக்கும்.நமக்கு பிடித்தமானவர்கள் அவர்களாகவே வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று  நினைப்...

மீண்டும் வரப்போகும் பப்ஜி .....

படம்
இந்தியாவில் பப்ஜி டிக்டாக் போன்ற செயலிகளுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.தற்போது மீண்டும்டைை இந்தியாவில் பப்ஜி வரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.  டிக்டாக் பப்ஜி போன்ற செயலிகள் எல்லாம் இ்ந்தியாவில் ஒரு சில காரணங்களால் தடை விதிக்கப்பட்டு இருந்தது. சீனாவுடன் ஏற்பட்ட எல்லை  பிரச்சனை காரணமாக சீன செயலிகளுக்கு இந்திய அரசு  தடை விதித்தது.   டென்சன்ட் நிறுவனம் தான் பப்ஜியின் உரிமையாளர்கள். இந்த நிறுவனம், சீன நிறுவனங்களுடன் உள்ள பங்கீட்டு தொடர்பை நிறுத்தப் போவதாகவும் கூறி உள்ளது. இதன் பேரில் பப்ஜி பெயர் மாற்றம் செய்து மீண்டும் இந்தியாவிற்க்குள் வரப்போவதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செய்தி  பப்ஜி வீரர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இனி ப்ரீ பயர் விளையாடுபவர்கள் நிலைமை என்ன ஆகப் போகிறது என தெரியவில்லை என்று பப்ஜி வீரர்கள் கூறியுள்ளனர்

தோனி இவவாறு செய்வார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்....!!!

படம்
  கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை   கொடுப்பதற்க்கு பல மததரப்பினரும் முன்வந்துள்ளனர். மசூதியை கொரோனா  சிகிச்சை மையமாக மாற்றி உள்ளனர். கோவில்களை கூட சிகிச்சை மையங்களாக மாற்றி உள்ளனர். வேற்றுமையாக காணப்பட்டாலும் ஒற்றுமையாக இருப்போம் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளனர். இந்தியர்கள். சிகிச்சை மையங்களின் பிரச்சனை முடிந்த நிலையில் ஆக்சிஜன் தட்டுபாடு ஏற்பட்டு இருக்கிறது.  இந்நிலையில் பல விளையாட்டு வீரர்களும் இந்தியாவிற்க்கு உதவ முன்  வந்துள்ளனர். பேட் கம்மின்ஸ் நிதியுதவி வழங்க முன் வந்த நிலையில் பாஜக அதன் பிரச்சார தேவைக்கு பயன்படுத்தி வருகிறது என்று அறிந்த உடன் அவர் உதவ முன் வரவல்லை. பின்னர் இந்தியாவின்  முன்னாள் வீரர் தோனி  அவர்கள் நிதியுதவி செய்துள்ளார். அவர், இந்த ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட ஐபிஎல் சம்பளத்தை முழுவதையும் கொரோனா சிகிச்சை மற்றும் நிவாரணத்திற்க்கு வழங்கி உள்ளார். இந்திய அணியில் இருந்த போதும் சரி தற்போதும் சரி  நாட்டிற்க்காக ஏதாவது   செய்து கொண்டே இருக்கிறார் எ...

மீண்டும் ஐபிஎல்.... உற்சாகத்தில் ரசிகர்கள்...

படம்
  சமீபத்தில் ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று அதிகமான காரணத்தால் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் கவலையில் முழ்கி இருந்தனர். இந்திய கிரிக்கெட் வாரியம், நாங்கள் விளையாட்டைக் காட்டிலும் ரசிகர்களின் நலனையே பெரிதும் விரும்புகிறோம். இதன் காரணமாகவே தொடரை கைவிடுகிறோம் என்று தெரிவித்து இருந்தது.  ஐபிஎல் தொடர் மட்டுமே மற்ற கிளப் தொடர்களை காட்டிலும் சுவாரசியமாக  இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து இருந்தனர். அதுமட்டுமின்றி பாதி தொடர் முடிவடைந்த நிலையில் தொடரை கைவிடுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து இருந்தனர்.  இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. ஐபிஎல் தொடர் தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தொடர்  செப்டம்பர் மாதம் நடக்கும் என்றும், நோய் தொற்று எவ்வளவு சீக்கிரம் குறைகிறதோ அவ்வளவு சீக்கிரம்  தொடரை மீண்டும் தொடங்குவோம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

விராட் கோலி தாத்தா ஆன பிறகு தான் மகுடம் வெல்வார்.அதிர்ச்சியில் ரசிகர்கள்....!!!

படம்
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.நோய்  தொற்று  அதிகமான நிலையில் ஐபிஎல் தொடர்   கைவிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட்  கவுன்சில் அதிகாரியும் முன்னாள் வீரருமான கங்குலி இந்த அறிவிப்பை   வெளியிட்டார்.ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து  கொண்டிருந்த  நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை உருவாக்கி உள்ளது. இந்த வருடமாவது மகுடம் சூட முடியுமா?  என்று எதிர்பார்த்த பெங்களூரு அணிக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. வயதான தோற்றத்தில் விராட் கோலி உடன் ஐபிஎல் கோப்பை  இருப்பது போன்றும்.2050ல் சென்னை மும்பை கொல்கத்தா ஆகிய இடங்கள் நீரில் முழ்கி விடும், அப்போது வேண்டுமானலும் பெங்களூரு அணி வெற்றி அடைய.வாய்ப்பு உள்ளது  என்று இணையதளங்களில் மீம் பதிவிடுவோர்.இந்த மீமை வைரலக்கி வருகின்றனர்.

மன அழுத்தத்தை வெல்லுங்கள் மாற்றத்தை உருவாக்குங்கள்.

படம்
மன அழுத்தம் எனும் நோய் தற்போது           வேகமாக பரவி வருகிறது.இக்காலத்தில் தற்கொலைகள் அதிகமாக நிகழ்ந்து வருகிறது இதற்கு காரணமும் அதுதான்.மன அழுத்தம் ஏற்படுவதற்க்கு காரணம் பிரச்சனைகளும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுமே ஆகும்.தொடர்தோல்வி எண்ணிய விசயம் நடக்காமல் போவது பிடித்தவர்களுடன் ஏற்படும் சண்டை இந்த காரணங்களாலே மக்கள் மன அழுத்தத்திற்க்கு உள்ளாகிறார்கள்.    பெரும்பாலான மக்கள் உறவுகள் மூலமாக ஏற்படும் கசப்பான விசயங்களாலே மன அழுத்தத்திற்க்கு உள்ளாகிறார்கள்.இரவு நேரங்களில் படுக்கையில் தலையனையை கட்டி பிடித்து  அழுது கொண்டிருப்பார்கள்.  இவர்கள் தனிமையிலே இருப்பார்கள். குற்ற  உணர்வில் சிக்கி கொண்டு இருப்பார்கள்.உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வாக இருப்பார்கள்.  இவர்களை மீட்டு எடுக்க மன நல நிபுணர்களிடம் அழைத்து செல்ல வேண்டும். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒருவர் உடன் இருக்க வேண்டும். மனதை ஊக்கப்படுத்தும் பாடல் அல்லது திரைப்படம் ஆகியவற்றை பரிந்துரைக்கலாம். தற்போது தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் மன அழுத்த்தில் உள்ளவர்களை மீட்டு...

இந்த வீரருக்கு கொரோனா தொற்றா..?

படம்
இன்று இரவு நடக்க இருந்த பெங்களூரு கொல்கத்தா இடையிலான லீக் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் போட்டி எப்ரல் மாதம் தொடங்கி இந்தியா முழுவதும் நடை பெற்று வருகிறது. பெங்களூரு அணி ஐபிஎல் மகுடத்தை வெல்ல  வேண்டும் என்று துடிப்புடன் விளையாடி வருகிறது. அதே வேளையில் கொல்கத்தா அணியும் மகுடத்தை வென்று நீண்ட நாட்களாகிறது. எனவே அந்த அணியும்கோப்பையை கோப்பையை வெல்ல ஆர்வத்துடன் உள்ளது.  இரு அணிகளும் மோத உள்ள நிலையில்  இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.    கொல்கத்தா அணியில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.இதில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழக வீரர் வருண்    சக்கரவர்த்திக்கும் சந்தீப் வாரியாருக்கும்  கொரோனா தொற்று உள்ளது. கொல்கத்தா  அணியின் நட்சத்திர வீரர்கள் இவர்கள்.கொரோனாஉறுதி ஆகி உள்ள நிலையில்  மற்ற வீரர்களுக்கும் பரவி இருக்கலாம் என்று வீரர்கள் அனைவருக்கும் பரிசோதனை      நடத்த வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கூறி உள்ளது.அத்துடன் போட்டியையும் ரத்து செய்துள்ளது. இந்த  போட்டியின் அட்டவனை   மாற...