எல்லோரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது இவ்வாறு செய்து இருப்போம். காலன்டர் வங்கிய புதிதில் தீபாவளி எப்போது வருகிறது.பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் வருகிறதா.? இல்லை வேலை நாளில் வருகிறதா? என்றெல்லாம் பார்த்திருப்போம்.அடுத்து ஒரு முக்கியமான நாளை பார்ப்போம்.ஆம் நமது பிறந்த நாளை பார்ப்போம் நமக்கு பிடித்தவரின் பிறந்த நாளை பார்ப்போம். நமது பிறந்த நாள் நெருங்க நெருங்க நமக்குள் இனம்புரியாத எதிர்பார்ப்பு தோன்றும். நமது பிறந்த நாளன்று நமக்கு படித்தமானவர்கள் வாழ்த்து தெரிவிப்பார்களா....? பரிசளிப்பார்களா..? என்றெல்லாம் தோன்றும். ஆனால் ஒருவேளை, ஒருவேளை நமக்கு பிடித்தவர்கள் நம்முடைய பிறந்த நாளை மறந்து விட்டால் அல்லது வாழத்து தெரிவிக்க தவறி விட்டால்.........
அன்று மிக கடுமையான நாளாக அமைந்து விடும். ஏதோ உலக பாரங்கள் அனைத்தும் உங்கள் மீது இருப்பது போல் உணர்வீர்கள். துக்கம் தொண்டையை அடைப்பது போல் இருக்கும்.நமக்கு பிடித்தமானவர்கள் அவர்களாகவே வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று நினைப்போம். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் என்ன செய்வது என்று விழித்து கொண்டிருக்கும் நிலை ஆகி விடும். எதிர்பார்ப்பு கண்டிப்பாக காயப்படுத்தும். எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்ளுங்கள். சிறிதுகாலம் வலிக்கும் பிறகு சரியாகி விடும். காலத்தினாலே அனைத்து சரியாகும்.
கருத்துகள்