இன்று இரவு நடக்க இருந்த பெங்களூரு
கொல்கத்தா இடையிலான லீக் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் போட்டி எப்ரல் மாதம் தொடங்கி இந்தியா முழுவதும் நடை பெற்று வருகிறது. பெங்களூரு அணி ஐபிஎல் மகுடத்தை வெல்ல வேண்டும் என்று துடிப்புடன் விளையாடி வருகிறது.
கொல்கத்தா அணியில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.இதில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கும் சந்தீப் வாரியாருக்கும் கொரோனா தொற்று உள்ளது. கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர்கள் இவர்கள்.கொரோனாஉறுதி ஆகி உள்ள நிலையில் மற்ற வீரர்களுக்கும் பரவி இருக்கலாம் என்று வீரர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்த வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கூறி உள்ளது.அத்துடன் போட்டியையும் ரத்து செய்துள்ளது. இந்த போட்டியின் அட்டவனை மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. நட்சத்திர வீரரான வருண்,சந்தீப் மீண்டும் முழு உடல்நலத்துடன் வர வேண்டும் என அந்த அணி வீரர்களும் நிர்வாகமும் பிரார்த்தனை செய்தனர்.
கருத்துகள்