மீண்டும் ஐபிஎல்.... உற்சாகத்தில் ரசிகர்கள்...

 


சமீபத்தில் ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று அதிகமான காரணத்தால் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் கவலையில் முழ்கி இருந்தனர். இந்திய கிரிக்கெட் வாரியம், நாங்கள் விளையாட்டைக் காட்டிலும் ரசிகர்களின் நலனையே பெரிதும் விரும்புகிறோம். இதன் காரணமாகவே தொடரை கைவிடுகிறோம் என்று தெரிவித்து இருந்தது. 

ஐபிஎல் தொடர் மட்டுமே மற்ற கிளப் தொடர்களை காட்டிலும் சுவாரசியமாக  இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து இருந்தனர். அதுமட்டுமின்றி பாதி தொடர் முடிவடைந்த நிலையில் தொடரை கைவிடுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து இருந்தனர். 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. ஐபிஎல் தொடர் தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தொடர்  செப்டம்பர் மாதம் நடக்கும் என்றும், நோய் தொற்று எவ்வளவு சீக்கிரம் குறைகிறதோ அவ்வளவு சீக்கிரம்  தொடரை மீண்டும் தொடங்குவோம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்