மன அழுத்தம் எனும் நோய் தற்போது வேகமாக பரவி வருகிறது.இக்காலத்தில் தற்கொலைகள் அதிகமாக நிகழ்ந்து வருகிறது இதற்கு காரணமும் அதுதான்.மன அழுத்தம் ஏற்படுவதற்க்கு காரணம் பிரச்சனைகளும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுமே ஆகும்.தொடர்தோல்வி எண்ணிய விசயம் நடக்காமல் போவது பிடித்தவர்களுடன் ஏற்படும் சண்டை இந்த காரணங்களாலே மக்கள் மன அழுத்தத்திற்க்கு உள்ளாகிறார்கள்.
பெரும்பாலான மக்கள் உறவுகள் மூலமாக ஏற்படும் கசப்பான விசயங்களாலே மன அழுத்தத்திற்க்கு உள்ளாகிறார்கள்.இரவு நேரங்களில் படுக்கையில் தலையனையை கட்டி பிடித்து அழுது கொண்டிருப்பார்கள்.
இவர்கள் தனிமையிலே இருப்பார்கள். குற்ற உணர்வில் சிக்கி கொண்டு இருப்பார்கள்.உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வாக இருப்பார்கள். இவர்களை மீட்டு எடுக்க மன நல நிபுணர்களிடம் அழைத்து செல்ல வேண்டும். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒருவர் உடன் இருக்க வேண்டும். மனதை ஊக்கப்படுத்தும் பாடல் அல்லது திரைப்படம் ஆகியவற்றை பரிந்துரைக்கலாம். தற்போது தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் மன அழுத்த்தில் உள்ளவர்களை மீட்டு எடுக்க வேண்டும்.
கருத்துகள்